அட போங்க ஆண்டவரே.. இப்போ கேட்டு என்ன பிரயோஜனம்.. சனமுக்கு குவிந்த ஆதரவு.. ஆரியால் கடுப்பான அனிதா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று ஒருவர் வெளியேற்றப்படவுள்ளார்.
இந்த வார நாமினேஷனில் ஆரி, அனிதா, சனம் ஷெட்டி, நிஷா, ரம்யா பாண்டியன், ஷிவானி, ஆஜித் ஆகிய 7 பேர் இடம் பிடித்தனர்.

யார் இருக்க வேண்டும்?
இதில் நேற்றைய எபிசோடில் ஆரியும், ரம்யா பாண்டியனும் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் அனிதா, ஷிவானி மற்றும் சனம் ஷெட்டி ஆகியோரை நடுவில் உட்கார வைத்த கமல் மூன்று பேரில் யார் இருக்க வேண்டும் என்று கேட்கிறார்.

சோம் விருப்பம்
அதற்கு பதில் சொல்லும் ரியோ, நிஷாவும் சனமும்தான் தங்க வேண்டும் என்கிறார். அவரை தொடர்ந்து பேசும் சோம், ஷிவானி தான் சேவாக வேண்டும் என்கிறார். அர்ச்சனாவும் சனம் ஷெட்டிதான் காப்பாற்றப்பட வேண்டும் என்கிறார்.

பாலாஜி விருப்பம்
நிஷாவும் சனம் ஷெட்டியே தங்க வேண்டும் என்று விரும்புகிறார். பாலாஜி, ஷிவானிதான் சேவாக வேண்டும் என்கிறார். ஆஜித், அனிதாதான் சேவாக வேண்டும் என்று நினைக்கிறார்.

அனிதாதான் வெளியே போவார்
ரம்யாபாண்டியனும் சனம் ஷெட்டிதான் சேவாக வேண்டும் என்கிறார். ஆரியிடம் கேட்கும்போது, அனிதாதான் வெளியே போவாருனுனு நினைக்கிறேன் என்கிறார். அதற்கு கமல் யார் தங்க வேண்டும் என்று கேட்டேன் என்கிறார்.
Recommended Video

முறைத்த அனிதா
அதற்கு சனம் சார் என்று கூறுகிறார். ஆரியின் பதிலால் மொத்த ஹவுஸ்மேட்ஸும் அய்யய்யோ என மிரளுகின்றனர். அனிதாவும் என்னையா வெளியே போவேன் என்று சொல்கிறாய் என்பதை போல முறைத்து பார்க்கிறார்.

அதான் அனுப்பிட்டீங்களே
இப்படியாக உள்ளது முதல் புரமோ. ஆனால் நேற்றே சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். இதனை அறிந்த ரசிகர்கள், இப்போ கேட்டு என்ன பிரயோஜனம் அதான் முடிவு பண்ணி அனுப்பிட்டீங்களே என்று விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











