மைக்கை மூடி ரகசியம் பேசும் ஹவுஸ் மேட்ஸ்..இரவில் வீட்டுக்கு போய்விடுகிறாரா பிக்பாஸ்?
பிக் பாஸ் வீட்டில் கடந்த முறை இல்லாத அளவில் மைக்கை மூடிக்கொண்டு போட்டியாளர்கள் பேசுவதும் பிக் பாஸ் கண்டு கொள்ளாமல் இருப்பதையும் காண முடிகிறது.
இதுவல்லாமல் இரவு நேரங்களில் தனித்தனியாக கூடி மைக்கை கழற்றி வைத்து ரகசிய குரலில் பேசுவதையும் காணமுடிகிறது இது போன்ற முறைகள் பிக்பாஸ் வீட்டில் இதுவரை அனுமதிக்கப்பட்டதில்லை.
தனிப்பட்ட ரகசியம் இல்லாத பிக்பாஸ் வீட்டில் இதுபோன்று ரகசியம் கடைபிடிக்கப்படுவது ஏற்புடையதா? என நெட்டிசன்கள் கேட்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் ரகசியம் காக்க அனுமதியா?
பிக் பாஸ் வீடு ஒரு திறந்த அரங்கம். இங்கு ரகசியத்திற்கு இடமில்லை. அனைத்து கேமராக்களும் உங்களை கண்காணிக்கும், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று சொல்வார்கள். அவரவர் பேசும் வார்த்தையை ரகசியமாக பிக் பாஸ் வீட்டில் பேச முடியாது. கடந்த சீசனில் பிரியங்கா நாமினேஷன் நேரத்தில் நிரூப்பை ரகசியமாக அழைத்து அவர் கையில் சைகை செய்ததை தக்க நேரத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோல் மைக் இல்லாமல் ரகசியம் பேசினால் பிக் பாஸ் உடனடியாக மைக்கை மாட்டச் சொன்ன கதையும் நடந்துள்ளது. இது தவிர சில இடங்களில் மைக்கை மூடி ரகசியம் பேசியதை குறும்படம் போட்டு காட்டி கமல்ஹாசன் கண்டித்துள்ளார்.

ஹஸ்கி வாய்ஸில் புறம் பேசிய ஜனனி-அமுதவாணன்
ஆனால் இந்த சீசனில் எப்படிப்பட்ட விதிமுறைகளும் வெகு சாதாரணமாக மீறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பிக் பாஸ் வீட்டுக்குள் ஜனனியும் அமுதவாணனும் ரகசிய குரலில் மைக்கை மறைத்துக் கொண்டு அடுத்தவர்களை பற்றி புறம் பேசிக் கொண்டிருந்தனர். புறம் பேசுவதில் வல்லவரான ஜனனி அமுதவாணனின் கட்டிலுக்கு சென்ற அமர்ந்து புறம் பேசிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் அவர்களுடன் இணைந்த மற்றொரு போட்டியாளரும் புறம் பேசிக் கொண்டிருந்தார். இதை பிக்பாஸ் கண்டுக்கொள்ளவே இல்லை, ஆனால் கேமரா பத்து நிமிடத்திற்கு மேல் இவர்கள் ஹஸ்கி வாய்ஸில் பேசுவதை காட்டிக் கொண்டே இருந்தது.

கூடி கோஷ்டியாகும் போட்டியாளர்கள்
இதே போல் எதிர்புறத்தில் கதிரவன் கட்டிலில் படுத்தபடி ஷெரின், மகேஸ்வரி உள்ளிட்டோர் ரகசிய குரலில் மைக்கை போடாமல் பேசிக் கொண்டிருந்தனர். வெகு நேரமாக அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாத அளவிற்கு மைக்குகள் நகர்த்தப்பட்டு இருந்தது. மைக்குகளை பின்னால் தள்ளிவிட்டு பேசுவது மூடியபடி பேசுவது பிக்பாஸ் வீட்டில் குற்றமாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்த சீசனில் இதுபோன்று பல சம்பவங்கள் அடிக்கடி நடந்தாலும் பிக் பாஸ் தரப்பிலிருந்து எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் இருக்கிறது. என்ன காரணத்தினால் இப்படி நடக்கிறது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர். நேற்று மதியம் மீண்டும் கதிரவனும், குயின்சியும் பட்டப்பகலில் மைக்கை கைகளால் மூடிக்கொண்டு ரகசியம் பேசினர். இதில் அனைத்து இடங்களிலும் விதி மீறியது கதிரவன், குயின்சி.

புறம் பேசி நாமினேட் செய்கிறார்கள்
நாமினேஷன் முன்பு புறம் பேசுவது, ஒருவரை சுற்றியே அனைவரும் பேசி நாமினேட் பண்ணுவது இந்த சீசனிலும் நடப்பது தெளிவாக தெரிகிறது. நேற்று முன் தினம் நடந்த எவிக்ஷன் ப்ராசஸில் ஷிவின்கணேசனை பெரும்பாலான ஆட்கள் நாமினேட் செய்தார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் அவர் சரியாக பழகுவதில்லை என்று. ஷிவின் கணேசன் சாதாரணமாக அனைவருடனும் பழகுகிறார். ஆனால் சப்பையான காரணங்களை சொல்லி அவரை நாமினேட் செய்வதை காண முடிந்தது. மற்றொரு தரப்பினர் விக்கிரமனை நாமினேட் செய்தனர். கூடி கூடி பேசுவது, ரகசியம் பேசுவது கோஷ்டி உருவாக வழி வகுக்கும். அதற்கு பிக்பாஸே வழி வகுக்கிறாரா? இதனால் நியாயம் பேசுபவர்கள் வெளியேற்றப்படுவார்கள். இப்படி நடப்பதால் பார்வையாளர்கள் சலிப்படைந்து விடுவார்கள். இரவில் நடக்கும் இதுபோன்ற மீறல்களை கண்டுக்கொள்ளாமல் பிக்பாஸ் வீட்டுக்கு போய் விடுகிறாரா? என்று கேட்கின்றனர்.


Click it and Unblock the Notifications











