சனம் ஷெட்டியை காமெடி பீஸாக்கிய ஹவுஸ்மேட்ஸ்.. சுரேஷை விளாசியதை வச்சு மரண பங்கம்!
சென்னை: சுரேஷை திட்டி தீர்த்த வார்த்தைகளை வைத்து சனம் ஷெட்டியை ஹவுஸ்மேட்ஸ் மரண கலாய் கலாய்த்தனர்.
சனிக்கிழமையான இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களை நடிகர் கமல் சந்திக்கிறார்.
இதற்காக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒபனிங் ஸ்பீச் கொடுத்த கமல், யாமறிந்த சீசன்களிலேயே இதுபோன்ற சண்டை சச்சரவுகள் நிறைந்த சீசனை பார்த்ததேயில்லை என்றார்.

கார்டன் ஏரியா
லடாக் வரை சென்றுவிட்டு திரும்பியதாக கலாய்த்தார். தொடர்ந்து பேசிய கமல் வெள்ளிக்கிழமை மட்டும் சும்மாவா இருப்பார்கள் என்று அங்கும் ஒரு க் வைத்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்தில் கார்டன் ஏரியாவில் அமர்ந்து சனம், ரம்யா, ஆரி, சம்யுக்தா, கேபி ஆகியோர் பேசுகின்றனர்.

காமெடி பண்ணலாம்
அப்போது, நாடா இல்ல காடா டாஸ்க்கின் போது சுரேஷ் சக்கரவர்த்தியை கடுமையாக பேசிய சனம் ஷெட்டியை வச்சு செய்தனர். சனம் ஷெட்டியை முதலில் பாடுமாறு கூறினர் ஹவுஸ்மேட்ஸ. அப்போது, நீங்கள் நல்லா காமெடி பண்ணலாம் என ஆரம்பித்தார் ரம்யா.

சண்டையை வைத்து கிண்டல்
சனம் ஷெட்டி ஸ்டைலாக பேசியதை வைத்து கிண்டலடிக்க தொடங்கினார். பின்னர் ஒவ்வொருவராய், சனம் ஷெட்டி நடந்து கொண்டு விதத்தை வைத்து மரண பங்கம் செய்தனர். நீ வெளியே வாடா என்றும், போடா என்றும் பேசியதையும் சொல்லி சொல்லி கிண்டலடித்தனர்.

யாரும் கண்டிக்கவில்லை
அன்று நடந்த சம்பவத்தை வைத்து முழுக்க முழுக்க கேலியும் கிண்டலுமாய் லூட்டி அடித்தனர் ஹவுஸ்மேட்ஸ். சனம் ஷெட்டி சுரேஷ் சக்கரவர்த்தியை கடுமையாக பேசியதை ஹவுஸ்மேட்டுகள் யாரும் கண்டிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











