twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    3 மணி நேரத்தை ஒன்றரை மணி நேரத்திற்குள் முடித்த பாலாஜி.. அப்செட்டான ரம்யா.. செம காண்டில் ஹவுஸ்மெட்ஸ்!

    |

    சென்னை: மணி கூண்டு டாஸ்க்கில் நேற்று சொதப்போ சொதப்பு என சொதப்பிய பாலாஜி முருகதாஸால் ஹவுஸ்மெட்ஸ் மொத்த பேரும் செம காண்டாகியுள்ளனர்.

    பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதில் ஹவுஸ்மெட்ஸ்கள் மூன்று பேராக 5 குழுக்களாக பிரிந்து 3 மணி நேரத்தை கணிக்க வேண்டும்.

    இதெல்லாம் கொஞ்சம் ஓவர் பிக்பாஸ்.. நள்ளிரவு ஒரு மணிக்கு குல்ஃபி விற்ற ராமசாமி அண்ணே!இதெல்லாம் கொஞ்சம் ஓவர் பிக்பாஸ்.. நள்ளிரவு ஒரு மணிக்கு குல்ஃபி விற்ற ராமசாமி அண்ணே!

    முதல் வாரம்

    முதல் வாரம்

    இதனை கடந்த மூன்று நாட்களாக விளையாடி வருகின்றனர் ஹவுஸ்மெட்ஸ். கடந்த வாரங்களாக லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் பாலாஜியால் மதிப்பெண்கள் குறைந்து வருகிறது. கடந்த வாரத்திற்கு முதல் வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் பாலாஜியால் 200 மதிப்பெண்கள் குறைந்தது.

    முட்டை மார்க்ஸ்

    முட்டை மார்க்ஸ்

    கடந்த வாரம் டாஸ்க்கை தவறாக விளையாடி மொத்த பாயிண்ட்ஸிலும் மண்ணை அள்ளி போட்டார் பாலாஜி. பாலாஜி தவறாக விளையாடிய காரணத்தால் லக்ஸரி பட்ஜெட்டில் பிக்பாஸ் முட்டை மதிப்பெண்களை வழங்கினார்.

    ஏனோதானோ..

    ஏனோதானோ..

    இந்தி வாரமாவது பக்காவாக விளையாடி மொத்த பாயிண்ட்ஸையும் பெற வேண்டும் என முயற்சி செய்து முழு மூச்சாக தூக்கத்தை தொலைத்து விளையாடி வருகின்றனர். ஆனால் பாலாஜி அந்த சீரியஸ்னஸை புரிந்து கொள்ளமால் ஏனோதானோ என விளையாடி வருகின்றார்.

    ஒன்றரை மணி நேரத்திற்குள்

    ஒன்றரை மணி நேரத்திற்குள்

    முதல் நாள் டாஸ்க்கில் 3 மணி நேரத்தை நான்கறை மணி நேரத்துக்கும் மேலாக நின்று பாலாஜியும் அவரது அணியில் உள்ள ரம்யா பாண்டியன் மற்றும் சுச்சி ஆகியோர் கணித்தனர். இந்நிலையில் நேற்றைய டாஸ்க்கின் இரண்டாம் சுற்றில் மூன்று மணி நேரத்தை ஒரு மணி நேரம் 25 நிமிடங்களில் முடித்தார்.

    அரை மணி நேரத்தில்..

    அரை மணி நேரத்தில்..

    நாம செட் பண்றதுதான் டைம் என தனது அணியினருடன் வியாக்கியானம் பேசிவிட்டு அவசர அவசரமாக முடித்தார். இதனை கிட்சனில் பாலாஜியிடம் விசாரித்தார் அர்ச்சனா. அப்போது, அரை மணி நேரத்தில் டாஸ்க்கை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

    ரம்யா அப்செட்

    ரம்யா அப்செட்

    நேற்று 4 மணி நேரத்தை கடந்ததை காம்பன்செட் பண்ண வேண்டும், இதிலேயே இன்னும் ஒரு மணிநேரம் மிச்சமாகி இருப்பதாக கூறினார். பாலாஜியின் இந்த நடவடிக்கையால் ரம்யா பாண்டியன் ரொம்பவே அப்செட்டாகிவிட்டார்.

    நெருங்கி வந்துள்ளனர்

    நெருங்கி வந்துள்ளனர்

    தொடர்ந்து கடிகார டாஸ்க்கின் மூன்றாம் சுற்றில் மூன்று மணி நேரத்தை 2 மணி நேரம் 42 நிமிடங்களில் முடித்தார். மூன்று சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் மூன்றாம் சுற்றில்தான் சற்று நெருங்கி வந்துள்ளது பாலாஜி டீம்.

    Recommended Video

    பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task
    ஸ்கேப்பாகி விடுவார்

    ஸ்கேப்பாகி விடுவார்

    பாலாஜி இப்படி பொறுப்பே இல்லாமல் விளையாடியதை பார்த்த நெட்டிசன்கள் இந்த முறையும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் மண்ணை அள்ளி போடாமல் விடமாட்டார் போலிருக்கே என்று கூறி வருகின்றனர். இன்னும் சிலர் இப்படி எல்லாவற்றையும் சொதப்பி விட்டு கடைசியில் புரியவில்லை என்று எஸ்கேப்பாகி விடுவார் என்றும் சாடி வருகின்றனர்.

    English summary
    Balaji is not serious in the Luxury Budget task. Balaji finished 3 hours task in 1 hour.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X