கமல்ஹாசனின் கதர் போட்டோ ஷூட்… இளம் அழகிகளுடன் மனுசன் என்னமா என்ஜாய் பண்ணிருக்காரு?

சென்னை: அரசியல், சினிமா, பிக் பாஸ் என ரொம்பவே பிஸியாக வலம் வருகிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.

இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல், 7ம் தேதி தனது 68வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்.

இந்நிலையில், கமல்ஹாசன் நடத்தியுள்ள செம்ம ஸ்டைலிஷான போட்டோ ஷூட் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

உற்சாகம்... கொண்டாட்டம்

உற்சாகம்... கொண்டாட்டம்

தமிழ்த் திரையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல மாயாஜாலங்களை நிகழ்த்தி வரும் கமல்ஹாசன், சினிமா மட்டுமின்றி அரசியலிலும் பயணித்து வருகிறார். இன்னொரு பக்கம் சின்ன திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமும் வெரைட்டி காட்டி வருகிறார். சில வருடங்களாக பெரிய வெற்றி படங்கள் கொடுக்காத கமலுக்கு, கடந்த மார்ச் மாதம் வெளியான விக்ரம் வெறித்தனமான பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே விக்ரம் வெற்றியுடன் தனது 68வது பிறந்தநாளையும் ரொம்பவே உற்சாகமாக கொண்டாடி முடித்துள்ளார் உலக நாயகன்.

ஹவுஸ் ஆஃப் கதர்

ஹவுஸ் ஆஃப் கதர்

இந்நிலையில், கமல்ஹாசனின் சமீபத்திய போட்டோ ஷூட், பலரையும் வியக்க வைத்துள்ளது. தனது 'ஹவுஸ் ஆஃப் கதர்' காதி பிராண்டிற்காக சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். கடந்தாண்டு புது பிசினஸ் ஒன்றை தொடங்கினார் கமல். அது பொருளாதார ரீதியிலான பிசினஸாக மட்டும் இல்லாமல், கதர் ஆடை விற்பனையாளர்கள், நெசவுத் தொழிலாளர்கள் துயரத்தை போக்கும் விதமாக கதர் ஆடைகளுக்கு என பிரத்யேக பிராண்ட் ஒன்றை தொடங்கினார். இந்த கதர் பிராண்டை 2020ல் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதிநாளின் போது அறிமுகப்படுத்தினார் கமல்ஹாசன்.

இளமை இதோ இதோ

இளமை இதோ இதோ

சர்வதேச பேஷன் டிசைனர்களை உள்ளடக்கிய இந்த நிறுவனம் கைத்தறி ஆடைகளை ஊக்குவிக்கும் எனவும் கமல் அப்போது அறிவித்திருந்தார். அதன்படி தற்போது கதர் ஆடை என்றாலே அது வயதானவர்களும் அரசியல்வாதிகளும் மட்டுமே விரும்புவார்கள் என்ற தோற்றத்தை கமல் மாற்றியுள்ளார். இளம் அழகிகளுடன் செம்ம ஸ்டைலிஷாக போட்டோ ஷூட் நடத்தி அமர்க்களம் செய்துள்ளார். கமலின் இந்த போட்டோ ஷூட் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதோடு, இணையத்திலும் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் 234

கமல்ஹாசன் 234

கதர் ஆடைகளுடன் கமல் நடத்திய போட்டோ ஷூட் இணையத்தையே கலக்கி வரும் நிலையில், அவரது அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கமல். பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இன்னொரு படத்திலும் கமல் நடிக்க கமிட் ஆகியுள்ளதாகவும், அதுகுறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கமலின் சமீபத்திய புகைப்படங்களை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X