கடைசி வரை அப்பாவை நல்லா பார்த்துக்கிட்டாரு அஜித் குமார்.. வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் பேட்டி!

சென்னை: நடிகர் அஜித் கடைசி வரை தனது தந்தையை நல்லா பார்த்துக் கொண்டார் என அவரது வீட்டில் வேலை செய்யும் வேலை ஆட்கள் பேசியுள்ள வீடியோக்கள் செய்தி சேனல்களில் வெளியான நிலையில் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

நடிகர் அஜித் எப்போதுமே தனது வீட்டில் வேலை பார்ப்பவர்கள் முதல் தனது படத்தில் நடிக்கும் நடிகர்கள் வரை பலரையும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்துவார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

அதனால் தான் ரசிகர்களுக்கு மட்டுமின்றி பிரபலங்களுக்கு அவர் மீது மிகப்பெரிய மரியாதை எப்போதுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமகனே கலங்காதே

தலைமகனே கலங்காதே

யாராக இருந்தாலும் அப்பாவின் இழப்பு என்பது அவ்வளவு எளிதாக கடந்து போகக் கூடிய ஒரு விஷயமில்லை. நம்மை பெற்று ஆளாக்கும் தந்தையின் உயிரிழப்பு நிச்சயம் அனைவரையும் மனதளவில் உடைத்து விடும். கடந்த 4 ஆண்டுகளாக பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்த தனது தந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளித்து பாதுகாத்து வந்த அஜித் இன்று அத்தனை முயற்சிகளையும் தாண்டி தனது தந்தை காலமானதை நினைத்து மிகவும் வருந்தி வருகிறார்.

பணியாட்கள் வேதனை

பணியாட்கள் வேதனை

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் மறைவை அறிந்த அவரது வீட்டில் செய்த பணியாட்களும் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். செய்தி சேனல்களுக்கு அவர்கள் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. நடிகர் அஜித்தை போல தங்கமானவரை பார்த்ததே கிடையாது என்றும் கூறியுள்ளனர்.

12 பேருக்கு வீடு

12 பேருக்கு வீடு

நடிகர் அஜித் குமார் தனது வீட்டில் வேலை பார்க்கும் சுமார் 12 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்தார் என்கிற செய்தி பல ஆண்டுகளுக்கு முன்பே வந்த நிலையில், இன்று செய்தி சேனல்களுக்கு பேட்டி அளித்த அந்த பணியாளர்கள் 7 வருடங்களுக்கு முன்பாகவே கண்டிகையில் வேலையாட்கள் 12 பேருக்குமே அஜித் சொந்த வீடு கட்டிக் கொடுத்தார் எனக் கூறினர்.

கடைசி வரைக்கும் பார்த்துக்கிட்டாரு

கடைசி வரைக்கும் பார்த்துக்கிட்டாரு

கடைசி வரைக்கும் அப்பாவை நடிகர் அஜித் நல்லா பார்த்துக்கிட்டாரு என்றும் அப்பா, அம்மா, அஜித், ஷாலினி, அவங்க பசங்க எல்லாருமே கூட்டுக் குடும்பமா இந்த வீட்டில் தான் இருந்தனர் என்றும் பணியாட்கள் பேசி உள்ளனர். பக்க வாதத்தில் கடந்த சில ஆண்டுகளாக நோயுற்று கிடந்த தனது தந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளையும் அஜித் பார்த்துக் கொண்டார் எனக் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X