ஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25ல் ரிலீஸ் - யூடியூபில் ட்ரெண்டான சைத்தான் கா சாலா

சென்னை: அக்ஷய் குமார் நடித்த ஹவுஸ்ஃபுல் 4 திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு கடந்த திங்களன்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. அதில் நடிகர் அக்ஷக் குமாரும் கலந்துகொண்டார். அப்போது இப்படத்தில் இடம்பெற்ற சைத்தான் கா சாலா பாடல் வெளியிடப்பட்டது. முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமான ஹவுஸ்ஃபுல் 4 வரும் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள படம் ஹவுஸ்ஃபுல் 4. ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கிய நகைச்சுவை திரைப்படமான இது ஹவுஸ்ஃபுல் ஃபிரான்சிஸின் நான்காவது பகுதியாகும்.

Housefull 4 Press meet…. Movie releases on October 25th

அக்ஷய் குமார், ரித்தீஷ் தேஷ்முக், பாபி தியோல், கிருதி சனோன், பூஜா ஹெக்டே மற்றும் கிருதி கர்பண்டா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஹவுஸ்ஃபுல் 4 படத்தின் பாடல்களை சோஹைல் சென், ஃபர்ஹாத் சாம்ஜி, சந்தீப் ஷிரோத்கர் மற்றும் பஞ்சாபி ஹிட் ஸ்குவாட் ஆகியோரும், பின்னணி இசையை ஜூலியஸ் பாக்கியமும் கையாண்டுள்ளனர். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டுங்கை முறையே சுதீப் சாட்டர்ஜி மற்றும் ராமேஸ்வர் எஸ்.பகத் கையாண்டுள்ளனர்.

1419 சகாப்தத்தில் சதி மற்றும் பழி வாங்கல் காரணமாக 6 காதலர்கள் பிரிந்து, 2019ஆம் ஆண்டில் மீண்டும் சந்திக்கின்றனர். இருப்பினும், தற்போதைய வாழ்க்கையில் 3 கதாநாயகர்கள் தங்களின் மற்ற மூவரையும் மாற்றி மணக்கின்றனர்.

திருமணத்திற்கான நேரத்தில் இவர்களின் கடந்த கால வாழ்க்கையை நினைவில் கொள்வார்களா, அல்லது வேறு வழியில்லாமல் தவறான காதலர்களுடன் என்றென்றும் மாட்டிக்கொள்வார்களா என்பதுதான் இப்படத்தின் கதை. ஹவுஸ்ஃபுல் 4 உங்களை 1419 ஆம் ஆண்டு முதல் 2019 வரை அழைத்துச் செல்கிறது.

இந்த படத்திலிருந்து EK CHUMMA எனும் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான SHAITAN KA SAALA என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது. ஹவுஸ்ஃபுல் 4 திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கடந்த திங்களன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அப்பொழுது ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் லக்ஷ்மி பாம் படப்பிடிப்பில் இருந்த அக்ஷய் குமாரும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது படத்தில் இடம்பெற்ற SHAITAN KA SAALA பாடல் வெளியிடப்பட்டது. நகைச்சுவை திரைப்படமான ஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 திரையில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X