ஜி.பி.முத்து கதையை கேட்க விரும்பாத ஹவுஸ்மேட்ஸ்கள்..பஸ்ஸரை அழுத்திய 3 பேர்
சென்னை: ஹவுஸ் மேட்ஸ் கதை சொல்லும் டாஸ்க்கில் தனது கதையை சொன்னார் ஜி.பி.முத்து.
அவர் கதை சொல்ல ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே ஹவுஸ் மேட்ச் அவருக்கு எதிராக பஸ்ஸரை அழுத்தினர்.
பிக் பாஸ் வீட்டில் அனைவரும் விரும்பும் நபர் என்று தேர்வு செய்யப்பட்டவர் ஜி.பி.முத்து. ஆனால் அவர் கதையை கேட்க யாரும் தயாராக இல்லை.

எவிக்ஷனிலிருந்து தப்பிக்க- கதை கேட்கும் டாஸ்க்
பிக் பாஸ் வீட்டில் அனைவரும் விரும்பும் நபர் என்று தேர்வு செய்யப்பட்டவர் ஜி.பி.முத்து. அவரது அனுபவங்களை ஹோம்மேட்ஸ்கள் விரும்பி கேட்டனர். அவருடைய வெள்ளந்தியான பேச்சை விரும்பி ரசித்தனர். பலரிடம் ஜி.பி.முத்து இயல்பாக பழகியதை காண முடிந்தது. இதை வைத்து கடந்த வாரத்தில் அனைவரையும் கவர்ந்த நபராக ஜி.பி. முத்துவை தேர்வு செய்தனர். பிக்பாஸ் கதை சொல்லும் டாஸ்க் இந்த வாரம் நடைபெறுகிறது. கதை சொல்லும் ஒரு போட்டியாளர் 60 நொடிகள் வரை யாருடைய ஆட்சேபனையும் இன்றி கதையை தொடர்ந்தால் அவர் அடுத்த வாரம் ஏவிக்சன் ப்ராசஸில் இருந்து தப்பலாம்.

ராபர்ட் மாஸ்டர் சொன்ன கதை
அந்த அடிப்படையில் இதுவரை ஆறு பேர் தப்பி உள்ளனர் இன்று காலையில் ராபர்ட் மாஸ்டர் கதை சொல்ல தொடங்கினார். அவர் கதை சொல்ல தொடங்கிய சிறிது நேரத்தில் அவருக்கு எதிராக ஒரே ஒரு பஸ்ஸர் அழுத்தப்பட்டது. ஆனால் ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து தனது கதையை கண்ணீருடன் சொல்ல ஆரம்பித்தவுடன் யாரும் பஸ்ஸர் அழுத்தாததால் அவர் தொடர்ந்து பேசினார். இதன் மூலம் அவரும் எவிக்ஷன் ப்ராசஸிலிருந்து தப்பினார். அடுத்து ஜி.பி.முத்து கதை சொல்ல சென்றார். அவர் கதை சொல்ல ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே உடனடியாக அசல் கோளார், ஜனனி உள்ளிட்ட மூன்று பேர் வந்து பஸ்சரை அழுத்தி அவருடைய கதையை நிராகரித்தனர்.

எப்படியானாலும் நான் வீட்டை விட்டு போய்விடுவேன் - ஜி.பி.முத்து
இதன் பின்னர் ஜி.பி.முத்து கதை நிராகரிக்கப்பட்டதாக பிக் பாஸ் சொல்ல அவர் வெளியே வந்தார். ஜி.பி.முத்து வெளியே வந்தவுடன் அவரை பாராட்டினர். பின்னர் என்னுடைய கதையை கேட்க நான் தேர்வு செய்யப்பட்டாலும் அடுத்த வாரம் வரை நான் வீட்டில் இருக்க போவதில்லை என்று ஜி.பி.முத்து சொல்ல நீங்கள் எப்படி வெளியேறுகிறீர்கள் என்று நான் பார்க்கிறேன் என்று அமுதவாணன் ஜி.பி. முத்துவிற்கு பதில் சவால் விட்டார். நான் எப்படியும் சென்று விடுவேன் என்று ஜி.பி.முத்து சொன்னார்.

கதை நிராகரிப்பு கண்டுகொள்ளாத ஜி.பி.முத்து
ஆனால் கதை சொல்லும் விவகாரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார், ஜி.பி.முத்து கதை கேட்கப்படும் இன்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில் ஜி.பி.முத்து கதை ஆரம்பித்த சில நேரத்திலேயே அவருடைய கதை நிராகரிக்கப்பட்டது எல்லோருக்கும் ஆச்சரியமூட்டும் சம்பவமாக அமைந்தது. ஜி.பி.முத்து கதையை நிராகரிப்பது பற்றி அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவர் வீட்டை விட்டு வெளியேறுவதிலேயே குறியாக இருப்பதை காண முடிந்தது.


Click it and Unblock the Notifications











