அண்ணாச்சிக்கு நல்லா இருக்கு...தாமரைக்கு பிடிக்கல...சுருதிக்கு கமெண்ட் கொடுக்கும் ஹவுஸ்மெட்ஸ்

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் 20 வது நாளான இன்று கமல் வரும் எபிசோட் என்பதாலும், பிரியங்கா மற்றும் அபிஷேக் பற்றி கமல் பேசும் ப்ரோமோக்கள் வெளியானதாலும் இன்றைய எபிசோட் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று நிகழ்ச்சி துவங்கியதுமே கமல், இந்த பிக்பாஸ் 5 வித்தியாசமானது. வழக்கமாக நிகழ்ச்சி முடிய போகும் சமயத்தில் வரும் பிரச்சனைகள் இந்த சீசனில் இப்போதே வந்து விட்டது என்கிறார். இதனால் இன்று தரமான சம்பவம் இருக்கும் என மக்கள் எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.

Housemates comments about suruthis dress

கமலும், எனக்கு இரண்டு நாட்களில் நிறைய கேட்க முடியாது. ஆனால் நான் கேட்காவிட்டாலும் நீங்க கேட்பீர்கள் என்கிறார். அப்படியானால் நிறைய கேட்க வேண்டும் என்ற கமல் முடிவு செய்து விட்டார் போல என ரசிகர்கள் கமெண்ட் செய்ய துவங்கி விட்டனர்.

இந்நிலையில் இதுவரை அல்ட்ரா மாடர்ன் டிரசில் வரும் சுருதி, இன்று சுடிதார் அணிந்து வந்தார். அதை பார்த்த இமான் அண்ணாச்சியும், ராஜுவும் டிரஸ் நன்றாக உள்ளது என கமெண்ட் செய்கிறார்கள். அப்படியா என நம்பால் கேட்கும் சுருதியிடம், நீங்க உயரமா இருப்பதால் சுடிதார் நன்றாக இருக்கிறது என விளக்கம் அளிக்கிறார் ராஜு.

அதே சமயம் கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கும் தாமரை, எனக்கு பிடிக்கவேயில்லை இந்த டிரஸ் என்கிறார். இதைக் கேட்டு சிரிக்கும் இசைவாணி, உங்களுக்கு என்ன அவளுக்கு பிடிச்சிருக்கு போட்டிருக்கா. நம்ம டிரசையும் பார்த்து மற்றவர்கள் இப்படி தான் சொல்வார்கள். மற்றவர்கள் சொல்வார்கள் என்பதற்காக நாம் எதையும் பண்ண முடியாது என்கிறார். இருந்தாலும் எனக்கு பிடிக்கல. ஒருவேளை கேமிராவிற்கு நல்லா இருக்கும் போல என்கிறார்.

அண்ணாச்சி முதல் முறையாக ஒரு பெண் போட்டியாளரின் உடை பற்றி கமெண்ட் செய்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதே சமயம் அபிஷேக், இசைவாணியை கலாய்த்த லாலிபப் போன்ற டிரசை தான் இசைவாணி அணிந்திருந்தார். ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. யாரும் கமெண்ட் செய்யவில்லை. இதையும் பலர் கேள்வியாக கேட்டுள்ளனர்.

டிரஸ் பற்றிய கமெண்ட்கள் மிக அரிதாகவே நடப்பதால், பலருக்கும் இது வித்தியாசமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம் அண்ணாச்சியின் இந்த கமெண்ட்டை யாரும் தவறு என்று சொல்லவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X