எல்லாம் ஆரியோட வயித்தெரிச்சல்.. என்னை எப்படி டிராமா பண்றேன்னு சொல்லாம்? பாலாவை வெளுத்துவிட்ட சோம்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் ஆரியை கதறவிட்ட பாலாஜியை மொத்தமாய் சேர்ந்து வச்சு செய்தனர் ஹவுஸ்மேட்ஸ்.

பிக்பாஸ் வீட்டில் நேற்று கால் செண்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதற்காக பிக்பாஸ் வீடு அடுத்த இரண்டு நாட்களுக்கு கால் செண்டராய் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதில் முதல் நாளில் பாதி பேர் வாடிக்கையாளர்களாகவும் பாதி பேர் கால் செண்டர் ஊழியர்களாவும் இருப்பார்கள் என்றும் இரண்டாம் நாளில் இது அப்படியே மாறும் என்றும் அறிவிக்கப்பட்ப்பட்டது.

வாடிக்கையாளர்கள் - ஊழியர்கள்

வாடிக்கையாளர்கள் - ஊழியர்கள்

இதனை தொடர்ந்து முதல் நாளான நேற்று பிக்பாஸ் வீட்டில் ரியோ, அர்ச்சனா, ஆரி, ரம்யா, சோம், நிஷா, சனம் ஷெட்டி ஆகியோர் வாடிக்கையாளர்களாக இருந்தனர். சம்யுக்தா, பாலாஜி, கேபி, ஆஜித், அனிதா, ஷிவானி, ரமேஷ் ஆகியோர் கால் செண்டர் ஊழியர்களாகவும் இருந்தனர்.

சோம் டிராமா

சோம் டிராமா

இதில் முதல் காலராக அர்ச்சனா, பாலஜியிடம் பேசினார். அப்போது சோம் உங்களை நாமினேஷன் செய்ததற்கு கூறிய காரணம் டிராமா, எல்லாரும் பார்ப்பார்கள் என்று அப்படி கூறினார் என்றார். இதனை தொடர்ந்து டாஸ்க் முடிந்து உள்ளே வந்தபோது கேபியிடம் உன்கிட்ட நம்பி ஒரு விஷயம் சொன்னா சிறப்பா செய்றீங்க என்றார்.

எப்படி டிராமான்னு சொன்ன?

எப்படி டிராமான்னு சொன்ன?

அதற்கு கேபி விளக்கம் கொடுப்பதை கூட கேட்கமால் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சோம், அர்ச்சனாவை நான் நாமினேட் செய்தபோது நான் டிராமா பண்ணேன் என்று எப்படி சொன்னாய் என்றார். மேலும் அது டிராமா இல்லடா, இனிமே அப்படி சொல்லாதே என்று கூறிவிட்டு கிளம்பினார்.

என் பேர காலி பண்ண..

என் பேர காலி பண்ண..

அதனைக் கேட்ட அர்ச்சனா, உன்ன பிரண்ட்ல வச்சு விளையாடுறேன்னு சொல்றத 12 மணி நேரத்துல கேட்குற. அவன் 30 நாளா காட்டிய பாசத்தையே நம்பல என்றார். அதற்கு பதில் சொன்ன பாலாஜி, புள்ள பாசம்ன்னு என்ன பிளாக் பண்றீங்க.. என் பேர காலி பண்ண எவ்ளோ குற்றச்சாட்டுக்களை வைக்கிறீங்க.

முழிச்சுக்கிட்டியா

முழிச்சுக்கிட்டியா

ஒரு பொண்ணு பேர காட்ட சொல்றீங்க, நான் காட்ட மாட்டேன்னு சொல்வேன் தெரிஞ்சுதான் கேட்டேன்னு சொல்றீங்க என்றும் அர்ச்சனாவுக்கு பதில் கூறினார். மேலும் உன் கேம் எனக்கு தெரியும் அர்ச்சனா என்றார் பாலாஜி. இதனைக் கேட்ட அர்ச்சனா ஓ உனக்கு தெரியுமா? நல்லது.. கடைசியா நீ முழிச்சுக்கிட்ட, அப்போ விளையாடு என்று கூறி வெறுப்பேற்றினார்.

ஆரியின் வயித்தெரிச்சல்

ஆரியின் வயித்தெரிச்சல்

இதேபோல் கேபி, ரியோ என அனைவரும் பாலாஜி விட்ட வார்த்தையால் கடுப்பாகினர். பாலாஜியை விளாசி விட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் எல்லாம் ஆரியோட வயிற்றெரிச்சல், ஆரியை மொத்தமாய் சேர்ந்து என்ன பாடுபடுத்தினார் என சாடினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X