செல்லம்மா ஷிவானி தான்.. ஒரே ஸ்டெப்பை சுத்தி சுத்தி போட்ட பாலாஜி.. பிக் பாஸுக்கு பெரிய தேங்க்ஸ்!

சென்னை: பாலாஜி முருகதாஸும், ஷிவானி நாராயணனும் டாக்டர் படத்தின் செல்லம்மா பாட்டுக்கு செம சூப்பராக டான்ஸ் ஆடினார்கள்.

ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த ஷிவானியின் அட்டகாசமான ஆட்டம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை இன்னும் எகிற வைத்திருக்கும்.

நம்ம பாடி பில்டர் பாலாஜி முருகதாஸ், உடம்பை வளைத்து நெளித்து ஆட ரொம்பவே கஷ்டப்பட்டார்.

பிரம்மாண்ட டான்ஸ் ஷோ

பிரம்மாண்ட டான்ஸ் ஷோ

பிக் பாஸ் தமிழ் 4ல் இந்த வாரம் பிரம்மாண்ட டான்ஸ் ஷோ நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியாளர்களும், பொட்டியில் வரும் இணையின் பெயரோடு சேர்ந்து கொடுக்கப்பட்ட உடைகளை நொடிப் பொழுதில் உடுத்திக் கொண்டு நடனமாட மேடைக்கு வந்து நல்லா ஆட வேண்டும். இன்றைய எபிசோடில் பாலாஜி முருகதாஸ், ஷிவானி சேர்ந்து செம டான்ஸ் ஆடினார்கள்.

சூப்பர் ஜோடி

சூப்பர் ஜோடி

4 ஜோடிகள் ஏற்கனவே நடனம் ஆடியுள்ள நிலையில், இன்று அடுத்த 4 பேர் நடனம் ஆடினார்கள். கடைசியாக ஷிவானி நாராயணன் மற்றும் பாலாஜி முருகதாஸ் நடனமாடும் காட்சி ஒளிபரப்பாகும் போதும், இணையதளங்களில் எல்லாம் ரசிகர்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டு விசில் அடித்தனர். ஷிவானி ஆர்மியனரின் வேலை தான் அது என்பது தெளிவாக தெரிகிறது.

ஷிவானி வேற லெவல் ஆட்டம்

ஷிவானி வேற லெவல் ஆட்டம்

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திற்காக அனிருத் போட்ட செல்லம்மா செல்லம்மா பாட்டுக்குத்தான் பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி நாராயணன் நடனம் ஆடினர். ஷிவானி நாராயணன் ஆடிய அந்த வேற லெவல் ஆட்டத்தை ஹவுஸ்மேட்களே ரசித்து பார்த்து பாராட்டினார்கள்.

சுத்தி சுத்தி ஒரே ஸ்டெப்

சுத்தி சுத்தி ஒரே ஸ்டெப்

ஒரு பக்கம் ஷிவானி தோனி போல சிக்ஸர் எல்லாம் அடித்து ஆடுவது போல ஆடிக் கொண்டிருக்கையில் இன்னொரு பக்கம் நம்ம மொரட்டு வில்லன் பாலாஜி முருகதாஸ், சுத்தி சுத்தி ஒரே ஸ்டெப்பை போட்டு கடுப்பேற்றிக் கொண்டிருந்தார். பிக் பாஸ் போட்டியாளர்களும் பாலாஜியின் ஆட்டத்தை பாராட்டவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X