வேட்டி சட்டையில் அசத்தலாய் வந்து.. வெடிகளை கொடுத்து கொளுத்திப்போட்ட கமல்.. சுச்சியை சூடேற்றிய கேபி!

சென்னை: பிக்பாஸ் நிக்ழச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

Recommended Video

Rajinikanth, Keerthy Suresh, Sneha & Other Celebrities Diwali celebration

தீபாவளியை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்து காணப்பட்டது.

சொல்லும் அளவுக்கு பெரிய சண்டையும் எதுவும் இந்த வாரம் நடைபெறவில்லை. இதனால் கமல் வரும் எபிசோடும் அந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இல்லை.

வேட்டி சட்டையில்..

வேட்டி சட்டையில்..

இந்நிலையில் இன்றைய முதல் முதல் புரமோவில் கறுப்பு வெள்ளை வேட்டி சட்டையில் அசத்தலாய் வந்தார் கமல். விக்ரம் பாடல் பின்னணியில் ஒலிக்க தீபாவளி வாழ்த்து கூறி கமல், இனிக்க வேண்டிய இடத்தில் இனிபோம் வெடிக்க வேண்டி இடத்தில் வெடிப்போம் என்றார்.

விவாதமும் உண்டு

விவாதமும் உண்டு

மேலும் பிக்பாஸ் வீட்டில் இன்று கொண்டாட்டமும் உண்டு விவாதமும் உண்டு என்றார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. புரமோவில் பேசும் கமல், இந்த வாரம் தான் மிக அமைதியாக கொண்டாடப்பட்ட வாரம் என நினைக்கிறேன் என்கிறார்.

மேட்சான வெடிகள்

மேட்சான வெடிகள்

தொடர்ந்து ஹவுஸ்மெட்ஸுடன் பேசும் கமல், ஹவுஸ்மெட்டுகளுக்கு தீபாவளியை முன்னிட்டு சிறப்பு டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார். அதன்படி ஹவுஸ்மெட்ஸ், போட்டியாளர்களுக்கு மேட்சான வெடிகளை கொடுத்து விளக்கம் கொடுக்க வேண்டும். இதுவும் போட்டியாளர்களை டிவிஸ்ட் செய்வது போன்றுதான் உள்ளது.

ஷிவானிக்கு ஊசி வெடி

ஷிவானிக்கு ஊசி வெடி

இதில் ஜித்தன் ரமேஷ், அனிதாவுக்கு சரவெடியை கொடுக்கிறார். அதனை தொடர்ந்து ஊசி வெடியை எடுக்கும் ஆஜித், அதனை ஷிவானிக்கு கொடுப்பதாக கூறி அவரிடம் கொடுக்கிறார். அதனை ஷிவானி வாங்கி வைத்து கொள்கிறார் ஷிவானி,

ரியோவுக்கு அணுகுண்டு

ரியோவுக்கு அணுகுண்டு

இதைப்பார்த்த கமல், என்னமோ கொடுத்துட்டாங்க என்பதை போல் வாங்கி வச்சுகிட்டாங்க என ஷிவானியை கலயாய்க்கிறார். அதனை தொடர்நது ஷிவானி ரியோவுக்கு அணுகுண்டு கொடுக்கிறார், இதனால் அதிர்ச்சியாகிறார் ரியோ.

சுச்சிக்கு பாம்பு மாத்திரை

சுச்சிக்கு பாம்பு மாத்திரை

தொடர்ந்து சோமசேகரை அழைக்கும் ரம்யா பாண்டியன், அவருக்கு பொட்டுவெடி கொடுப்பதாக தெரிகிறது. பின்னர் வரும் கேபி, பாம்பு மாத்திரைகளை கையில் எடுத்து வைத்துக்கொண்டு இதனை சுச்சிக்கு தருவதாக கூறுகிறார். அதனை தொடர்ந்து ஹவுஸ்மெட்ஸ் கொளுத்து கொளுத்து என்கின்றனர். இவ்வாறாக உள்ளது பிக்பாஸின் இரண்டாவது புரமோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X