கேப்டனாக பிரியங்காவை ஏற்க மறுக்கும் ஹவுஸ்மெட்ஸ்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 22 ம் நாளான இன்று, போட்டியாளர்கள் பஞ்சதந்திரம் டாஸ்கில் கைப்பற்றிய நாணயங்களின் பவர்களை பயன்படுத்த பிக்பாஸ் அனுமதி அளித்தார்.
இந்த வாரம் நெருப்பு ஆற்றலுக்கான வாரம் என அறிவித்த பிக்பாஸ், கிச்சன் ஏரியாவிற்குள் யார் வர வேண்டும் என இசைவாணி தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

கேப்டன்சி டாஸ்க்
இதைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான கேப்டனை தேர்வு செய்வதற்கான டாஸ்க் நடத்தப்பட்டது. இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் மதுமிதா மற்றும் பிரியங்கா போட்டியிட்டனர். இவர்களில் யார் கேப்டன் ஆக வேண்டும் என விரும்புகிறார்களோ அவர் மீது ஸ்மைலி பால்களை வீச வேண்டும்.

பிரியங்காவை ஏற்க மறுப்பு
இதில் பிரியங்கா மற்றும் மதுமிதா கையில் இருக்கும் வலையில் பிடிக்க வேண்டும். முடிவில் யார் அதிகமான பந்துகளை வைத்திருக்கிறார்களோ அவர்ளே இந்த வார தலைவர் என கூறப்பட்டது. இதில் இருவரும் சம அளவில் பந்து வைத்திருந்ததால், குரல் வாக்கெடுப்பு நடத்த கூறினார் பிக்பாஸ். அதில் அதிகமானவர்கள் மதுமிதாவை தேர்வு செய்தனர்.

ஏமாற்றத்தில் பிரியங்கா
பிரியங்கா கேப்டனாக வரவேண்டும் என யாரும் விரும்பவில்லை என்பதும், அவர் மீது அதிருப்தியில் அனைவரும் இருப்பதையும் இது காட்டுகிறது. தன்னை தலைவராக தேர்வு செய்வார்கள் என பிரியங்கா எதிர்பார்த்த நிலையில் இது அவருக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

டீம் பிரித்த மதுமிதா
யாரும் தங்களிடம் வைத்திருக்கும் நாணயத்தின் பவரை பயன்படுத்தாத காரணத்தால் மதுமிதா, கேப்டனாக தேர்வு செய்யப்படுவதாக பிக்பாஸ் அறிவித்தார். புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட மதுமிதா, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பிறகு டீம்களை பிரித்தார்.

மைக் மாட்டாத கேப்டன்
இனி அனைவரும் சேர்ந்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என தனது கருத்தை கோரிக்கையாக தெரிவித்தார். இதனை ஹவுஸ்மெட்கள் கைதட்டி வரவேற்றனர். யாரும் தூங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே மதுமிதா மைக் மாட்டாமல் இருந்ததை பிக்பாஸ் எச்சரித்தார்.

அபிஷேக்கின் ஆசை
மதுமிதாவை வீட்டின் கேப்டனாக்கி, அவரின் திறமையை வெளியில் கொண்டு வருவேன் என பல நாட்களாக கூறிக் கொண்டிருந்தவர் அபிஷேக். ஆனால் அவர் வெளியேற்றப்பட்ட அடுத்த நாளே மதுமிதா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டு ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











