பாயிண்ட்டு...தாமரைக்கு எதிராக ஒன்று சேரும் போட்டியாளர்கள்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ல் தற்போது டிக்கெட் டு ஃபினாலேவை வெல்வதற்கான டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று நடத்தப்பட்ட முதல் டாஸ்கில் பெரும்பாலானவர்கள் நிரூப்பிற்கு எதிராக ஓட்டளித்து அவரை போட்டியில் இருந்து வெளியேற்றினர்.
என்னை மக்கள் காப்பாற்றி விடுவார்கள். டிக்கெட் உனக்கு கிடைக்க வேண்டும் நீ விளையாடு என நிரூப்பிடம் சொல்லும் தாமரை, சஞ்சீவ் வேறு யாராவது ஓட்டை மாற்றுகிறீர்களா என கேட்கும் போது கடைசி வரை அமைதியாக இருந்தார். டாஸ்க் முடிந்து நிரூப் வெளியேற்றப்பட்ட பிறகு கேம் பற்றி பிரியங்காவிடம் சந்தேகம் கேட்கிறார் தாமரை.

தாமரைக்கு எதிராக பேச்சு
பிரியங்கா மற்றும் தாமரைக்கு இடையே நடக்கும் வாக்குவாதத்தின் போது, தனக்கு ஜெயிக்க வேண்டும் என்று இல்லை என ஓப்பாக சொல்கிறார் தாமரை. இதனால் கடுப்பாகி தாமரையை திட்டி விட்டு செல்கிறார்கள் பிரியங்கா மற்றும் சஞ்சீவ். தொடர்ந்து தாமரையின் செயல் பற்றி வீட்டிற்குள் பிரியங்கா, சஞ்சீவ், பாவனி, அமீர், சிபி ஆகியோர் பேசிக் கொள்கிறார்கள்.

ஸ்மார்ட்டா விளையாடுகிறார்
அப்போது, ஜெயிக்க வேண்டாம் என்றால் முன்னாலேயே சொல்லி இருக்கலாமே என்கிறார் பிரியங்கா. அதற்கு பதிலளிக்கும் சிபி, அவங்க ஸ்மார்ட்டாக தான் விளையாடுறாங்க. கேம் முடிந்த பிறகு தானே அப்படி பேசினார்கள். டாஸ்க் நடந்து கொண்டிருக்கையில் பேசவில்லையே. ஏமாற்றுகிறவனை விட, ஏமாறுகிறவன் மீது தான் தவறு என்கிறார். இதை அமீரும் சரி என்கிறார்.

எல்லோரும் பயப்படுகிறீர்கள்
பிறகு பேசும் சஞ்சீவ், நீங்க ஏற்று கொள்கிறீர்களோ இல்லையோ. ஆனால் நான் வெளிப்படையாக சொல்கிறேன். சிலருக்கு வெளியில் மக்கள் செல்வாக்கு இருப்பதால் மக்கள் என்ன நினைப்பார்களோ, குடும்பத்தில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என நினைத்த பலர் தாங்கள் நினைப்பதை சொல்வதில்லை. என்னால் அப்படி பயந்து இருக்க முடியாது. மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பதற்காக அவர்கள் பேசுவதெல்லாம் சரி என்றாகி விடாது என்கிறார்.

யாருக்கும் விட்டுக் கொடுக்கலியே
அதற்கு மிக ஆவேசமாக அமீர், பாயிண்ட்டு...சரியான பாயிண்ட்டு. உங்க எல்லோருக்குமே உங்க மண்டைக்குள் இருக்கு. ஆனால் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள் என்கிறார். அவங்க ஸ்மார்ட்டாக விளையாடுறாங்க என்கிறார் சிபி. இவங்க வந்தா விட்டு கொடுத்துடுவேன், அவங்க வந்தா விட்டுக் கொடுத்துடுவேன் என்கிறார். ஆனால் அவர் இதுவரை யாருக்கும் விட்டு கொடுத்தது இல்லை என்கிறார் சஞ்சீவ்.

என்னை அவ தான் நாமினேட் செய்தா
இரண்டு பேரை நாமினேட் செய்வதாக இருந்தால் நான் வீட்டை விட்டு போய் விடுவேன் என்றார் என்கிறார் சிபி. பிரியங்காவும், உனக்கு எதிராக ஒரு புள்ளி கூட வைத்ததில்லை என்றாள். கடந்த நான்கு வாரங்களாக என்னை நாமினேட் செய்தது அவ தான் என்கிறார். அப்படியானால் உங்களுக்கு கேம் தெரியும். எல்லாம் தெரிந்து கொண்டு தான் விளையாடுகிறீர்கள் என்கிறார் சஞ்சீவ்.
Recommended Video

குறிவைக்கப்படும் தாமரை
நேற்று நிரூப்பை குறிவைத்து ஒன்று கூடி பேசி வெளியேற்றினார்கள். இன்று தாமரையை குறிவைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். தனித்தனியாக விளையாட சொன்னால் இவர்கள் ஏன் ஒரு சிலரை மட்டும் குறிவைத்து, மற்றவர்கள் கூட்டாக சேர்ந்து விளையாடுகிறார்கள் என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











