ரவுண்டு கட்டிட்டாங்களே.. சனம், ஷிவானி, சம்யுக்தா இப்படி மொத்தமா மொத்துனா எப்படி.. பாவம்மா கேப்டன்!

சென்னை: இந்த வார தலைவராக ரியோ ராஜ் இருக்கும் போது, ஏகப்பட்ட கலவரங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்து வருகின்றன.

இன்றைய நிகழ்ச்சியின் புரமோவை நேற்றே தெரியாமல் எடிட்டர் போட்டு பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில் கேப்டன் ரியோவை, சனம் ஷெட்டி, ஷிவானி மற்றும் சம்யுக்தா என ஒவ்வொருத்தராக ரவுண்டு கட்டி கார்னர் பண்ணும் காட்சிகள் அட்டகாசம்.

சண்டை போட்ட கேப்டன்

சண்டை போட்ட கேப்டன்

என்னடா இந்த வாரம் ரியோ ராஜ் கேப்டனா இருக்காரு, ஆனால், வீட்டில் நடக்கும் எந்தவொரு பிரச்சனை பற்றியும் தலையிடவில்லையே இப்படி ஏகப்பட்ட சண்டைகள் வெடித்து வருகிறதே என்றும், ரியோவும் பொறுமை இழந்து பாலாவுடனும், சனம் ஷெட்டியுடனும் சண்டை போட்டது ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியது.

அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டார்

அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டார்

பிக் பாஸ் எடிட்டர் பாவம் என்ன பண்ணுவது என்று தெரியாமல், இன்னைக்கு போட வேண்டிய புரமோவை நேற்றே வெளியிட்டு, ரசிகர்களையும் குழப்பி அவரும் கன்ஃபியூஸ் ஆகி அதகளமாகி விட்டது. அன்சீன்ல எல்லாம் நம்ம ரசிகர்கள், ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் நடந்த சண்டையை தேடி ஏமாந்து போய்விட்டனர்.

ரியோவின் ஃபேவரிசம்

ரியோவின் ஃபேவரிசம்

ஆஜீத்துக்கு கால் பண்ணி பேசிய ரியோ ராஜ், பாலா பற்றியும், அனிதா சம்பத், சனம் ஷெட்டி நட்பு பற்றியும் பேசியதை வைத்து சனம் ஷெட்டி ரியோவிடம் சண்டை இழுத்தார். கோபத்தின் உச்சிக்கு சென்ற ரியோ போடி என்றெல்லாம் திட்டிய நிலையில், மூன்றாவது புரமோவில் ஆமாம், நான் ஆஜீத்துக்கு ஃபேவரிசம் தான் பண்றேன் என பேசி சனமை ஆஃப் செய்தார்.

சுற்றி வளைத்த ரம்யா

சுற்றி வளைத்த ரம்யா

சனம் ஷெட்டியை தொடர்ந்து கேப்டன் ரியோவை, சுற்றி வளைத்த ரம்யா பாண்டியன், நீங்க டிசைட் பண்ணும் போது, அந்த இடத்துல எங்களை எல்லாம் வச்சி கேட்டு இருக்கணும்ல எனக் கூறி ரியோவை மேலும், சூடேற்றுகிறார். பொதுவாக கேப்டனாக மாறி விட்டால், அமைதியாக மற்றவர்களின் பிரச்சனையை தீர்க்க முயல்வார்கள். ஆனால், ரியோவின் ட்ரீட்மென்ட் வேற மாறி இருக்கு.

ஷிவானியும் விடல

ஷிவானியும் விடல

எல்லாரும் தூங்கும் போது கேள்வி கேட்கிற நீங்க, ராஜா வீட்டு கன்னுக்குட்டியான ரமேஷ் அண்ணா தூங்கும் போது ஏன் கேள்வி கேட்க மாட்றீங்க என ரியோவிடம் ஷிவானி கேட்கிறார். பரவாயில்லையே, ஷிவானி இப்போ தான் சூப்பரா ரியோவை கேள்வி எல்லாம் கேட்க ஆரம்பித்துள்ளார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இன்னொரு கேஸ்

இன்னொரு கேஸ்

மாத்தி மாத்தி ரியோவை பிக் பாஸ் வீட்டின் பெண் போட்டியாளர்கள் சுற்றி வளைத்து ஒவ்வொரு பிரச்சனை பற்றி கேட்டும், பஞ்சாயத்து பண்ணியும் வரும் கலக்கலான புரமோ ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. போதா குறைக்கு, சம்யுக்தா, ரியோவை அழைத்து இங்க வாங்க ஒரு கேஸ் என தனது பஞ்சாயத்தையும் ரியோவிடம் பேசுவது சூப்பர்.

அர்ச்சனா, நிஷாவை காணோம்

அர்ச்சனா, நிஷாவை காணோம்

எப்போதும் அர்ச்சனா மற்றும் நிஷாவை சுற்றியே இருக்கும் ரியோ ராஜ், இன்றைய புரமோவில் ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி, அனிதா சம்பத், சம்யுக்தா, ஷிவானி நாராயணன் என எல்லோரிடமும் பேசுவதை பார்ப்பதற்கே நல்லா இருக்கு, இந்த ரோலர் கோஸ்டர் ரைடில் சிக்கி ரியோ கேப்டன் சின்னா பின்னம் ஆகாமல் இருந்தால் சரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X