மண்ணைக் கவ்வியது புன்னகை மன்னி கேப்டன்சி.. ரம்யாவை வேற லெவலில் கலாய்த்த கமல்.. தரமான சம்பவம்!

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில் ரம்யாவை பங்கமாக கமல் கலாய்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சைலன்ட்டா சிரிச்சிட்டே டைட்டில் வாங்கிடலாம்னு நினைச்சிட்டு இருக்கும் ரம்யா பாண்டியனின் மாஸ்க்கை அவிழ்க்கும் முயற்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறுகின்றன.

இந்த வாரம் ரம்யாவின் கேப்டன்சி எப்படி இருந்தது என்கிற கேள்வியை கமல் கேட்டதும், ஹவுஸ்மேட்கள் தங்கள் மனக்குறைகளை அவிழ்த்து விட்டு வருகின்றனர்.

சுவாரஸ்யமான போட்டியாளர்

சுவாரஸ்யமான போட்டியாளர்

கடந்த வாரம் பாலா மற்றும் நிஷாவை வீழ்த்தி கேப்டன்சி டாஸ்க்கில் வெற்றி பெற்ற ரம்யா தலைவர் பதவியை ஏற்றார். வழக்கம் போல ரம்யா இந்த வாரமும் கேப்டன்சியை சிறப்பாகவே செய்தார் என்றும், ஒட்டுமொத்தமாக ஈடுபாடு காட்டிய சுவாரஸ்ய போட்டியாளர் என இந்த வாரமும் ஹவுஸ்மேட்களால் தேர்வு செய்யப்பட்டிருந்தார் ரம்யா.

புன்னகை மன்னி

புன்னகை மன்னி

புன்னகை மன்னனான கமல்ஹாசன், பிக் பாஸ் வீட்டின் புன்னகை மன்னி என ரம்யாவுக்கு புது டைட்டில் கொடுத்ததும் மீண்டும் தனது சிரிப்பை சிரித்து அனைவரையும் கடுப்பேற்றினார் ரம்யா பாண்டியன். புன்னகை மன்னியின் இந்த வார கேப்டன்சி எப்படி இருந்தது என்கிற கேள்வியை மூன்றாவது புரமோவில் கமல் எழுப்பியுள்ளார்.

ஆரம்பித்து வைத்த பாலா

ஆரம்பித்து வைத்த பாலா

லக்சரி டாஸ்க்கில் இந்த முறை ரம்யா பாண்டியன் ஒரு கேப்டனாக சொதப்பினார் என்பதை, மத்தவங்களுக்கு ஒரு எக்ஸாம்பிளா லீடு பண்ணியிருக்கலாம்னு தோணுச்சு என ரம்யா பாண்டியன் வாங்கி வைத்திருந்த நல்ல பெயர்களை ஒட்டுமொத்தமாக போட்டு உடைக்கும் வேலையை அழகாக பாலா ஆரம்பித்து வைத்தது புரமோவில் தெரிகிறது.

அர்ச்சனா

அர்ச்சனா

ரம்யாவுக்கே சாஃப்ட் ஹர்ட்டாக பாலாவும் அவரை தொடர்ந்து அர்ச்சனாவும் லேசான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். பாத்திரம் கழுவும் டீமில் நிகழ்ந்த குழப்பத்தை ரம்யா தலையிட்டு தீர்க்கவில்லையோ என்பது போல தெரிந்தது என அர்ச்சனாவும் தனது பங்கிற்கு கொளுத்திப் போட்டுள்ளார்.

நான் கேப்டன் கிடையாது

நான் கேப்டன் கிடையாது

என்ன ஒரு வார்த்தை பயன்படுத்துனாங்க ரொம்ப ஹர்ட் ஆக இருந்தது. கோழி டாஸ்க்கின் போது நிறைய பிரச்சனைகள் எழுந்த போது, கேப்டனா தலையீட்டு கேட்பார் ரம்யா என பேசிய இடத்தில், இப்போ நான் கேப்டன் கிடையாது, நான் இப்போ டாஸ்க்கில இருக்கேன்னு சொன்னாங்க என ஆரி ஒட்டுமொத்த பேகேஜையும் இறக்கி வைத்து விட்டார்.

புரியல சார்

புரியல சார்

பாலாஜி முருகதாஸ், அர்ச்சனா மற்றும் ஆரி அடுத்தடுத்து ரம்யா பாண்டியனின் கேப்டன்சி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய நிலையில், உங்களுக்கு ஒரு பொறுப்பிருக்கும் போது, நீங்க தான் அதை விளக்கி சொல்லி இருக்கணும் என கமல் சொல்லும் போது, எனக்கே புரியல சார் என பொய் சிரிப்போடு ரம்யா பேச நீங்க தான் தலைவர் எனும் போது அதை எப்படியாவது புரிந்து கொண்டு இருக்கணும்ல என்றார்.

அரசியல் பஞ்ச்

அரசியல் பஞ்ச்

பிக் பாஸ் வீட்டில் கேப்டன் பதவி குறித்து பேசும் போது வழக்கம் போல கமல் சார் கொஞ்ச நேரத்துக்கு பிக் பாஸ் கமலாக இல்லாமல், மநீம கட்சித் தலைவராக மாறி அரசியல் பேச ஆரம்பித்து விடுவார். ரம்யா புரியல சார் என்று சொன்ன இடத்தில் இன்னைக்கும் ஏதாவது அரசியல் பஞ்ச் இருக்குமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X