பிக்பாஸ் வீட்டின் எவிக்ஷன் லிஸ்ட்டில் இருப்பவர்கள் இவர்கள்தான்.. எத்தனை ஓட்டுன்னு பாருங்க மக்களே!

சென்னை: பிக்பாஸ் வீட்டின் எவிக்ஷன் லிஸ்ட்டில் இருப்பவர்கள் 7 பேரும் இடம் பிடித்துள்ளனர்.

Recommended Video

Bigg Boss 4 Tamil • Day 9 | Housemates in Vijay Style • Nomination

கடந்த வாரம் நடைபெற்ற கடந்து வந்த பாதை டாஸ்க்கின் போதே பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதியில்லாதவர்கள் என 8 பேரை சக ஹவுஸ் மேட்ஸ்கள் தேர்வு செய்தனர்.

அதன்படி, சனம் ஷெட்டி, ஆஜித், கேப்ரில்லா, ஷிவானி, சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி, ரேகா, ரம்யா பாண்டியன் ஆகிய 8 பேர் நாமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாமினேஷன் புராசஸ்

நாமினேஷன் புராசஸ்

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் முதல் எவிக்ஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது. இதற்கான புரமோ இன்று காலை வெளியானது. அதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது.

இருவர் நாமினேட்

இருவர் நாமினேட்

அதன்படி நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ளவர்களின் பெயர்களை கூறி ஒவ்வோரு ஹவுஸ்மேட்டும் தலா இரண்டு பேரை நாமினேட் செய்யவேண்டும் என கூறினார். இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் கன்ஃபெஷன் ரூமுக்கு சென்று சக ஹவுஸ்மேட்டுகள் இருவரை நாமினேட் செய்தனர்.

அதிக ஓட்டு

அதிக ஓட்டு

அதில் அதிகபட்சமாக சனம் ஷெட்டியைதான் ஹவுஸ்மேட்ஸ்கள் நாமினேட் செய்துள்ளனர். சனம் ஷெட்டி அதிகபட்சமாக 11 ஓட்டுகளை பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து ஷிவானி 6 ஓட்டுக்களை பெற்று எவிக்ஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளார்.

சுரேஷ் எஸ்கேப்

சுரேஷ் எஸ்கேப்

அவரை தொடர்ந்து சம்யுக்தா 5 ஓட்டுகளையும் நடிகை ரேகா 4 ஓட்டுக்களையும் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து கேப்ரில்லா, ஆஜித் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் தலா 2 ஓட்டுகளை பெற்று எவிக்ஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்த சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆனதால் நாமினேஷன் புராசஸில் இருந்து தப்பித்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X