Don't Miss!
- News ஆரம்பிக்கும்போதே "மக்கர்" செய்த ஓட்டு மெஷின்.. நாகையில் ஒரு பூத்தில் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஏற்கனவே எல்லாம் அரை லூசு.. இப்ப முழு பைத்தியமாவே மாறிட்டாங்க.. பீட்டருக்கு வேட்டு வைத்த பிக்பாஸ்!
சென்னை: இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சி நல்லா சுவாரஸ்யமாவே ஆரம்பித்து சென்றுக் கொண்டு இருக்கின்றன.
Recommended Video
அதிலும், குறிப்பாக நேற்றைய நிகழ்ச்சி வேற லெவல். ஆங்கிலத்தில் பீட்டர் விட்டு சுற்றிக் கொண்டு இருந்த பிக் பாஸ் போட்டியாளர்களை, ஜிப்ரிஷ் மொழியில் பேச வேண்டும் என பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் செம!
அரை லூசுகளாக திரிந்து கொண்டிருந்த போட்டியாளர்களை முழு லூசாக்கி அழகு பார்த்தார் பிக் பாஸ். தேங்க்யூ பிக் பாஸ்!
நேரத்தின் அருமை
நேரத்தின் அருமையை போட்டியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிக்கனத்தை கடை பிடிக்க வேண்டும் என ஏகப்பட்ட சமூக நோக்கங்கள் கொண்ட ஸ்க்ரிப்ட்டை டாஸ்க்காக கொடுத்து போட்டியாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு அட்வைஸ் செய்து வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.
மனித குலத்தின் சண்டை
பிக் பாஸ் வீட்டில் நடைபெறும் சண்டைகள் எல்லாம் ரீல் சண்டைகளாக இருந்தாலும், அது மனித குலத்தின் ரியல் சண்டைகளின் பிரதிபலிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. மனிதர்களின் காழ்ப்புணர்ச்சி, கோபம், கண்ணீர், பொறாமை, புறம் பேசுதல் இவை எல்லாவற்றையும் மிக்ஸ் பண்ணிய கதம்ப சோறு தான் பிக் பாஸ்.பிக் பாஸ் வீட்டில் நடைபெறும் சண்டைகள் எல்லாம் ரீல் சண்டைகளாக இருந்தாலும், அது மனித குலத்தின் ரியல் சண்டைகளின் பிரதிபலிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. மனிதர்களின் காழ்ப்புணர்ச்சி, கோபம், கண்ணீர், பொறாமை, புறம் பேசுதல் இவை எல்லாவற்றையும் மிக்ஸ் பண்ணிய கதம்ப சோறு தான் பிக் பாஸ்.
மாயக் கண்ணாடி
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை ஒவ்வொரு காரணத்துக்காகவும், அவர்கள் செய்யும் சின்ன சின்ன சண்டைகளுக்கும் சகட்டு மேனிக்கு திட்டும் இந்த சமூகம் ஒவ்வொரு நாளும் புத்தர்களாக எந்த கணமும் நடந்து கொள்வது இல்லை என்பதை காட்டும் மாயக் கண்ணாடி தான் பிக்பாஸ். பழனியில் நிலத் தகராறு காரணமாக துப்பாக்கியால் சுட்டு சாகடிக்கும் கொடூரங்கள் நம் சமூகத்தில் சர்வ சாதாரணமாக நடப்பது குறிப்பிடத்தக்கது.
ஜிப்ரிஷ் மொழியில்
தமிழ் மொழியில் பேசுவது என்றாலே பல பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தகராறு தான். சர்வ சாதாரணமாக பொது மக்களை போல அவர்கள் வாழ்விலும் ஆங்கிலம் இரண்டற கலந்து விட்டது. இந்நிலையில், ஆங்கிலத்தில் பீட்டர் விடுவதை கொஞ்ச நேரம் தடுக்க ஜிப்ரிஷ் மொழியில் பேசும் டாஸ்க்கை பிக் பாஸ் பணித்தார்.
முழு லூசாவே மாறிட்டாங்க
அரை லூசுகளாக திரிந்து கொண்டிருந்த பிக் பாஸ் போட்டியாளர்கள், ஜிப்ரிஷ் மொழி பேசும் டாஸ்க்கில் முழு லூசுகளாகவே மாறிட்டாங்க. நிஷா, ஷிவானி, கேபி எல்லாம் பேசியது செம காமெடியாக நேற்றைய நிகழ்ச்சியை கொண்டு சென்றது. கேபி ஜிப்ரிஷ் மொழியில் பேசுவதை தாண்டி பாடவும் செய்தார். பாரேன், இந்த புள்ளைக்குள்ள அத்தனை திறமை இருக்கு, ஆனால், இத்தனை நாளா கூட்டத்திற்குள் காணாமல் போயிருந்தார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
ஏற்கனவே அனிதா அப்படித்தான்
சன் டிவி செய்திவாசிப்பாளராக சிங்கப்பெண்ணாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தவர் அனிதா சம்பத். விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முழு லூசு பெண்ணாகவே மாறியதை பார்த்து ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர். பாவம் இந்த வாரம் நீயே வெளியே போயிடும்மா என்று ரசிகர்களையே சொல்லும் அளவுக்கு அவரை நடிக்க வைத்து வருகின்றனர்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்கூட ஹீரோயினா நடிக்க கேட்டேன்.. அவாய்ட் பண்றாங்க.. கண்கலங்கிய விஜய் டிவி புகழ்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?