நிஷா போக மாட்டால.. ரியோவை கட்டிப்பிடித்து அழுத அர்ச்சனா.. பாலாவுக்கு ஏன் அப்படி வியர்த்தது?

சென்னை: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் என திடீரென குண்டை கமல் தூக்கிப் போட்டதும், அனிதாவின் வாய் அஷ்ட கோணங்களுக்குப் போனது.

Recommended Video

பாலாவை தெளிய வைத்த ஆரி, இனி ஆட்டம் ஆரம்பம் | Bb4 Day 64 Highlights | Oneindia Tamil

ஹவுஸ்மேட்கள் ஒவ்வொருவரும் பதற ஆரம்பித்தனர். ரியோ என்னை கூட வெளியே அனுப்பிடுவாங்கன்னு புதுசா ஒரு கதை விட ஆரம்பித்தார்.

சொன்ன மாதிரியே ஷிவானி வெளியே போயிடுவாளோ என்கிற பயத்தால் பாலாவுக்கு பனி காலத்திலும் வியர்த்தே விட்டது.

ஆயுதத்தை எடுத்த கமல்

ஆயுதத்தை எடுத்த கமல்

இந்த முறை போட்டியாளர்கள் எல்லாம் ரொம்பவே போரிங்கா விளையாடுவதற்கு காரணம், எல்லாருமே மீடியாவை நல்லாவே தெரிந்து வைத்திருப்பவர்கள். விஜய் டிவி செல்லப்பிள்ளைகள். அதனால், குரூப்பா விளையாடுவது, சேஃபா விளையாடுவது என இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியையே போர் ஆக்கி விட்டனர். எவ்ளோ சொல்லியும் கேட்காததால் கமல் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்.

பயம் தெரியுது குமாரு

பயம் தெரியுது குமாரு

அர்ச்சனாவின் அன்பு கேங்கில் உள்ளவர்கள், குமாரு என்கிற பட்டப்பெயரை வைத்துக் கொண்டு ஜாலியாக பொழுது போக்கி வந்த நிலையில், அந்த குரூப்பில் இருந்தே ஆட்களை வெளியேற்ற இந்த வாரம் பிக் பாஸ் டீம் முடிவு கட்டி விட்டது. ஒரே அடியாய் இரண்டு பேர் வெளியேற போறாங்க என்றதும் அனைவரது முகத்திலும் பயம் தெரிந்தது.

அஷ்ட கோணல் அனிதா

அஷ்ட கோணல் அனிதா

அன்பு கேங்கில் இருக்கும் ஒருத்தருக்குத் தான் பாயாசம் போட்டேன். ஆனால், கமல் சார், இரண்டு பேரை வெளியே அனுப்ப போறாரே என்பது தெரிந்ததும், அனிதாவின் வாய் அஷ்டக் கோணலில் போய் வேற லெவல் ஓவர் ரியாக்‌ஷன் செய்தது. கண்டிப்பா தான் வெளியே மாட்டேன் என்பதை தெரிந்து கொண்ட அனிதா, நிஷா நிச்சயம் வெளியேறுவார் என்றே சந்தோஷப்பட்டார்.

உளர ஆரம்பித்த ரியோ

உளர ஆரம்பித்த ரியோ

நாமினேஷன் பட்டியலில் இல்லாதவர்களை கூட ரூல்ஸ் பிரேக் பண்ணாங்கன்னு டபுள் எவிக்‌ஷன்ல வெளியே அனுப்பிடுவாங்க, நான் கூட வெளியே போக வாய்ப்பிருக்கு என்பது போல, புதுசா ஒரு கதை விட்டு, அர்ச்சனாவிடம் உளர ஆரம்பித்து விட்டார் ரியோ ராஜ்.

நிஷா போகமாட்டால

நிஷா போகமாட்டால

நிஷா தான் இந்த வாரம் வெளியேற போறான்னு ஏற்கனவே ரியோ கிட்ட சொல்லிட்டு, இப்போ டபுள் எவிக்‌ஷன்னு சொன்னதும், நிஷா போகமாட்டால ரியோ, என அவரை கட்டிப்பிடித்து அழுத காட்சிகள் ரொம்ப கொடூரம். செண்ட் ஆஃப்ல அழுகாச்சி சீன் இல்லைன்னு சந்தோஷப்பட்ட ஆடியன்ஸுக்கு நடுவிலே அர்ச்சனா அழுது ஆப்பு வச்சிட்டார்.

பாலாவுக்கு ஏன் வியர்க்குது

பாலாவுக்கு ஏன் வியர்க்குது

கார்த்திகை மாதத்தில் ஏசி ரூமில் பாலாவுக்கு ஏன் அப்படி வியர்க்குதுன்னு கமல் சாரே கேட்டு விட்டார். கிளைமேட் அப்படின்னு அங்கேயும் ஒரு பொய்ய்யைக் கூறி சமாளித்தார் பாலா. தான் சொன்னது போலவே ஷிவானியும் இந்த வாரம் வெளியேறுகிறாரா? என்ற பயத்தால் வந்த வியர்வை தான் அது. அவருக்கு அவர் கவலை!

வெளியேறியது ரமேஷ்

வெளியேறியது ரமேஷ்

ஒவ்வொருத்தரும் ஒவ்வொருத்தரை நினைத்து பயந்தார்களே தவிர ஜித்தன் ரமேஷை யாருமே அப்போது கூட நினைத்து பார்க்கவில்லை. கன்ஃபெஷன் ரூமில் இருந்து ரகசிய வழியில் பிக் பாஸ் அவரை வெளியேற்றி விட்டார். எல்லா ரூமிலும் ரகசிய அறை இருக்கும் போல, நம்புவோம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X