For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஏகப்பட்ட பப்பட்ஸ்.. ஷிவானிக்கு ஒழுங்கா ரீசன் கூட சொல்ல தெரியல.. ரியோவும், ஆரியும் ஜாலியா ஜெயிலில்!

  |

  சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஈடுபாடு குறைவான போட்டியாளர் என ரியோவையும் ஆரியையும் கண்ணாடி சிறையில் அடைத்தனர்.

  Aari or Bala? Who is the hero | BIG BOSS TAMIL | Filmibeat Tamil

  கஸ்டமர் கேர் டாஸ்க் முடித்து வெளியே வந்த பாலாவிடம் கேபி, அர்ச்சனா, நிஷா, ஆரி, ரியோ, சனம், சோம் என ஏகப்பட்ட பேர் சண்டை போட்டனர்.

  ஆனால், ரியோ ஆஜீத்திடம் பேசிய பிறகு வெடித்த சண்டையை மட்டுமே மனதில் வைத்து ரியோவையும், பாலாவுக்கு எதிராக பொங்கிய ஆரியையும் கண்ணாடி சிறைக்கு ஹவுஸ்மேட்ஸ் அனுப்பியது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தின.

  அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார்? போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க!

  பாலாவின் பப்பட்ஸ்

  பாலாவின் பப்பட்ஸ்

  கடந்த வாரம் கேப்டன்சி டாஸ்க்கில் ரியோ ஜெயிக்க வேண்டும் என உற்சாகப்படுத்திய ரம்யா பாண்டியனையே தனது பக்கம் இந்த வாரம் லாவகமாக மாற்றிக் கொண்டார் பாலாஜி முருகதாஸ். இப்போ பாலாவின் பப்பட்களாக சம்யுக்தா, ஷிவானி, ஆஜீத், அனிதா, சனம் மற்றும் ரம்யா என ஒரு பெரிய டீமே இருக்கிறது.

  அர்ச்சனாவும் பாலா பக்கம் தான்

  அர்ச்சனாவும் பாலா பக்கம் தான்

  சம்யுக்தாவையும் பாலாவையும் எப்படியாவது தனது வேல் கேங்கில் சேர்த்து விட வேண்டும் என்று, ஆரியை வேண்டுமென்றே அர்ச்சனாவும் ஈடுபாடு குறைவான போட்டியாளர் என தேர்வு செய்ததை பார்க்கும் போதே நல்லா தெரிகிறது. பாலாவுடன் அப்படி சண்டை போட்ட நிலையில், அர்ச்சனா ஏன் பாலாவை நாமினேட் செய்யவில்லை என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

  ஆட்டு மந்தை

  ஆட்டு மந்தை

  பாலாஜி முருகதாஸ் ஒருவரை எப்படி ஸ்கெட்ச் போட்டு காலி செய்யும் தோரணையில் பேசுகிறாரோ, அவரை அப்படியே பின் பற்றி சம்யுக்தா, அனிதா, அஜீத், ஷிவானி உள்ளிட்டோர் ஆட்டு மந்தையை போல செல்கிறார்கள் என்பதை ஆரி நல்லாவே ரியோவுக்கு விளக்கினார். ரியோ ஃபைனலுக்கு போவார் என சொன்ன ஷிவானி, தன்னை வைஸ் கேப்டனாக மாற்றிய ரியோவை ரீசன் கூட சொல்லத் தெரியாமல் ஆஜீத்தை எல்லாம் இழுத்து பேசியது செம காமெடி.

  ஜாலியா ஜெயிலில்

  ஜாலியா ஜெயிலில்

  கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் ஜெயிலுக்குள் அடைக்கப்பட்ட நிலையில், பாலாஜி முருகதாஸ் அவ்வளவு ஆத்திரப்பட்டார். சுச்சியிடம் கோபப்பட்டு பாத்ரூம் டோரை எல்லாம் உடைத்து ஆணி குத்தி கையில் ரத்தக் காயம் எல்லாம் ஏற்பட்டது. ஆனால், இப்போ ஆரியும் ரியோவும் ஜாலியா ஜெயிலுக்கு சென்றதும், அங்கே பேசிக் கொண்டதும் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது.

  ஆரிக்கு அட்வைஸ்

  ஆரிக்கு அட்வைஸ்

  எல்லோருக்குமே பிக் பாஸ் வீட்டில் அட்வைஸ் பண்ணி வரும் ஆரிக்கு, கண்ணாடி அறைக்குள் ரியோ ஒரு குட்டி அட்வைஸ் கொடுத்தார். டோட்டலா, பாலா மற்றும் ஷிவானி பக்கமே ஃபோக்கஸ்டா இருக்காதீங்க புரோ, பாலாவை தாண்டி ஏகப்பட்ட விஷக் கொடுக்குகள் இருக்கின்றன உஷாரா இருக்கணும் எனக் கூறினார். எல்லோரும் தனியா பேசும் போது அவ்ளோ நல்லவங்களா ஆகிடுறாங்களே எப்படி?

  English summary
  Housemates sent Aari and Rio Raj in Bigg Boss glass room. But, both are not feel for that and enjoyed inside the jail.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X