முதல் முறையா கேப்டனயே ஜெயிலுக்கு அனுப்பும் ஹவுஸ்மேட்ஸ்.. மூன்றாவது முறையாக ஆரியும்!

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

முதல் புரமோவில் ரியோ சனம் பேசும் போது, ஒரு கேப்டனாக கவனம் செலுத்தாது மற்றும் நேற்றைய நிகழ்ச்சியில் ரியோவுக்கு எதிராக சனம், ரம்யா, ஷிவானி மற்றும் சம்யுக்தா ஒன்று திரண்டது ரியோவை போரிங் போட்டியாளர் ஆக்கி விட்டது.

மூன்றாவது முறையாக ஆரி பிரதருக்கு அமைதியான சூழலில் தியானம் செய்யும் வாய்ப்பு கிடைத்து விட்டது.

இந்த வாரம் ரியோ தான்

இந்த வாரம் ரியோ தான்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ரியோவை கேப்டன் ஆக்கியதே அவரை இப்படி வச்சு செய்யத்தான். கடந்த வாரம், தங்களது ஒட்டுமொத்த திறமையையும் இருவரும் காட்டி கேப்டனாகவும், அந்த போட்டியில் ரன்னர் அப் ஆகவும் ஆகினர். ஆனால் அவர்களை பிளான் பண்ணி இந்த வாரம் கண்ணாடி அறையில் சிக்க வைத்து விட்டார் பாலா.

சனம் தான் காரணம்

சனம் தான் காரணம்

ரியோ மற்றும் ஆரி கண்ணாடி சிறைக்கு செல்ல முழுக்க முழுக்க காரணமே சனம் ஷெட்டி தான். இருவரிடமும் 2 நிமிஷம் பேசுவதாக சமாதான தூதுவராக நடித்து, தனது ஒன் சைடு லவ்வர் பாலாவுக்காக நல்லாவே இருவரிடமும் கேம் ஆடி வருகிறார் என நெட்டிசன்கள் சனம் ஷெட்டியை விளாசி வருகின்றனர்.

நல்லா தேவை

நல்லா தேவை

அர்ச்சனா அக்கா மடியில ஹாயா படுத்துக்கிட்டு இருந்தல ரியோ, இது உனக்கு நல்லா தேவை, முதல் முறையா ஒரு கேப்டனாக இருந்து கொண்டு ஜெயிலுக்குப் போனது பிக் பாஸ் வரலாற்றிலேயே நீங்களாத்தான் இருப்பீங்க என்றும் கலாய்த்து வருகின்றனர். ரியோவும் ஆரியும் இந்த வாரம் அத்தனை சண்டை போட்டும் ஈடுபாடு காட்டவில்லை என எப்படித் தான் கணிக்கின்றனரோ தெரியவில்லை.

வஞ்சம் தீர்க்க

வஞ்சம் தீர்க்க

பாலா குரூப்புக்கும் ரியோ குரூப்புக்கும் நடக்கும் குருக்‌ஷேத்ரா போரில் எந்த அணி ஜெயிக்கிறது என்பது போலத்தான் இந்த சீசன் பிக் பாஸ் நடைபெற்று வருகிறது. இடையே சிக்கி இரண்டு பக்கமும் அடிபடும் தவிலாக ஆரி மாட்டிக் கொண்டு முழிக்கிறார் என்றும் ரசிகர்கள் கருதி வருகின்றனர்.

ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி

ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி

கன்னுக்குட்டி அனிதா சம்பத் மற்றும் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி ஜித்தன் ரமேஷ் ஆகிய இருவரையுமே இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெருசா பார்க்கலையே, அவங்களை எல்லாம் நாமினேட் செய்யாமல், பாலாவை எதிர்த்து சண்டை போட்ட ரியோவையும், ஆரியையும் மட்டும் டார்கெட் பண்ணி ஜெயிலுக்கு அனுப்பவது என்ன ஸ்ட்ராட்டஜி என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

சனம் சட்னிதான்

சனம் சட்னிதான்

தம்பி ரியோவை ஜெயிலுக்கு அனுப்பிட்டியேன்னு சனம் ஷெட்டியை பார்த்து மூன்றாவது புரமோவில் நிஷா அக்கா எகிறியதை பார்த்தால், சனம் அவங்க கிட்ட சிக்கினால், அம்மியில் வச்சு அரைச்சு சட்னி ஆக்கிடுவாங்க போல என்றே ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். ரியோவை பகைத்துக் கொண்டால், நிஷா மற்றும் அர்ச்சனா நிச்சயம் அடுத்த வாரம் அந்த டீமுக்கு பெரிய ஆப்பு வைக்க திட்டம் தீட்டி விடுவார்கள், பாலாவும் உன்னை கை விட்டு ஷிவானி பக்கம் சென்று விடுவார் சனம் என்றும் எச்சரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X