சோமின் திருட்டுத்தனத்தை காட்ட குறும்படம் போட்ட பிக்பாஸ்.. அதிர்ச்சியில் உறைந்த ஹவுஸ்மெட்ஸ்!
சென்னை: சோமின் திருட்டுத்தனத்தை பிக்பாஸ் குறும்படம் போட்டு தோலுரித்ததை பார்த்து ஹவுஸ்மெட்ஸ் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் இன்று முடிவுக்கு வந்தது.
இதனை தொடர்ந்து, கடந்த ஹவுஸ்மெட்ஸுடன் பேசினார் பிக்பாஸ். அப்போது லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கான பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கை தவறாக விளையாடி சொதப்பி விட்டதாக கூறினார் பிக்பாஸ்.

பெரும் அதிர்ச்சி
குறிப்பாக பாலாஜியை வச்சு செய்தார் பிக்பாஸ். லக்ஸரி பட்ஜெட்டில் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படுகிறது என்றார். இதனால் ஹவுஸ் மெட்ஸ் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

திருடர்கள் அறிமுகம்
பாலாஜி விளக்கம் கொடுத்தும் அதை ஏற்க மறுத்துவிட்டார் பிக்பாஸ். புரிந்து கொண்டு விளையாடுங்கள் என பாலாஜிக்கு அட்வைஸ் செய்தார். இதனை தொடர்ந்து, பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கின் திருடனை அவரது கூட்டாளிகளையும் அறிமுகம் செய்து கொள்ள சொன்னார் பிக்பாஸ்.

தாங்கள் செய்த வேலை
அப்போது, சோம், ரம்யா, கேபி ஆகியோர், பிக்பாஸ் தங்களுக்கு கொடுத்த சீக்ரெட் டாஸ்க் என நடந்ததை விளக்கினர். மூன்று பேருமே சீக்ரெட் டாஸ்க்கில் தாங்கள் செய்த வேலையை பகிர்ந்து கொண்டனர்.

குறும்படம் போட்ட பிக்பாஸ்
தொடர்ந்து சோம் எப்படி திருடினார், அதை எப்படி ஒளித்து வைத்தார், தனது கூட்டாளிகளுடன் என்ன பேசினார் என்பது உட்பட அனைத்தையும் குறும்படம் போட்டுக் காட்டினார் பிக்பாஸ். இதனை பார்த்த ஹவுஸ்மெட்ஸ் ஆவென வாயை பிளந்துவிட்டனர்.

என்னென்ன வேலை
பிக்பாஸ் போட்ட குறும்படத்தால் சோம் செய்த திருட்டுத்தனத்தை பார்த்த ஹவுஸ்மேட்ஸ், இப்பாடி இருந்துகொண்டு என்னென்ன வேலை செய்திருக்கிறாய் என கேட்டு கிண்டலடிக்க தொடங்கினர். நிஷா, நான் தான் அப்போவே சொன்னேனே என சோமை போட்டுவிட்டார்.


Click it and Unblock the Notifications











