இந்த டீம் ஜாலியா இருக்காங்கப்பா.. ரேகாவை தூங்கவிடாமல்.. 'பார்க்' பண்ணிய ஹவுஸ்மேட்ஸ்.. கலக்குங்க!
சென்னை: பகலில் தூங்கிய ரேகாவை நாயை போன்று குரைத்து ஹவுஸ்மேட்ஸ் தூங்கவிடாமல் செய்தது ரசிக்கும் படியாக இருந்தது.
Recommended Video
கடந்த பிக்பாஸ் சீசன்களில் பகலில் யாரும் தூங்கக்கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியிருந்தார் பிக்பாஸ்.
முதல் சீசனில் தூங்குபவர்களை எழுப்ப நாய் குறைக்கும் சவுண்டை ஒலிபரப்பினார்கள். கடந்த சீசனில் துப்பாக்கியால் சுட்டனர்.

பகலில் தூக்கம்
இந்நிலையில் இந்த சீசனில் தூங்குபவர்களை எழுப்ப எந்த கண்டிஷனும் போடப்படவில்லை. இதனால் நடிகை ரேகா பகலிலேயே இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார்.

பிக்பாஸிடம் ரகசியம்
இதனை பார்த்த ரம்யா பாண்டியன், ஷிவானி, கேப்ரில்லா மற்றும் சம்யுக்தா ஆகியோர் ரேகாவை எழுப்ப நாயை குரைக்கவிடுமாறு ரகசியமாய் கூறினர். பின்னர் அவர்களே நாய் போல் சத்தமாக குரைத்தனர்.

கேவலமா மிமிக்ரி
நான்கு பேரும் சேர்ந்து ஒரே நேரத்தில் நாய் போன்று குரைத்ததால் டிஸ்டர்ப் ஆன ரேகா தூங்காமல் எழுந்துவிட்டார். ஆனால் கொஞ்சமும் டென்ஷன் ஆகாமல், கேவலமா மிமிக்ரி பண்றீங்க.. நாய் எப்படி குரைக்கும் தெரியுமா என்று கேட்டு நாய் போன்று குரைத்து காண்பித்தார்.

ரசிக்கும்படியான செக்மெண்ட்
அனிதாவும் சனமும் எப்போதும் அடுத்தவர் பற்றியே புரணி பேசிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த நாள்வர் மட்டும் ஜாலியாய் இருந்தது பிக்பாஸ் செக்மெண்டிலேயே ரசிக்கும்படியான ஒன்றாய் இருந்தது.


Click it and Unblock the Notifications











