Housemates X Review: சிவகார்த்திகேயனின் அடுத்த தரமான தயாரிப்பு.. ஹவுஸ்மேட்ஸ் ட்விட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: தமிழ் சினிமாவில் ஃபேண்டஸி படங்கள் வருவதே மிகவும் குறைவுதான். அதிலும், குறைந்த பட்ஜெட்டில் நல்ல ஃபேண்டஸி படங்களை இயக்குநர்கள் கொடுத்தால், உடனடியாக தியேட்டர்களூக்குச் சென்று ரசிகர்கள் பார்த்து விடுவார்கள். அந்த வரிசையில் இந்த ஹவுஸ்மேட்ஸ் படம் இருக்கும் என பிரஸ் ஷோவில் படம் பார்த்த பலரும் ட்விட்டரில் விமர்சனங்களை தட்டிக் கொண்டிருக்கின்றனர்.
கனா படத்தில் வந்த "ஒத்தையடி பாதையில" பாடலில் நடித்து அசத்திய தர்ஷன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், காளி வெங்கட், வினோதினி, ஹர்ஷா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜவேல் எழுதி, இயக்கியுள்ளார்.

படத்தின் போஸ்டரிலேயே மின்சாரம் ஒரு முக்கியப் பங்கு வகித்து வரும் நிலையில், படத்திலும் அது மேஜர் ரோல் செய்திருப்பதாக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த படத்தின் ட்விட்டர் விமர்சனங்களை இங்கே காணலாம் வாங்க..
ஹவுஸ்மேட்ஸ் விமர்சனம்: #HouseMates - 3.75/5 👌 Worth Fantasy Concept and Unique Idea in Entertainment way 👏⚡
@kaaliactor once again super performance 👏 main pillar of the movie காளி வெங்கட் நடிப்பு தான்👍👍. ⚡
@VinodhiniUnoffl also 👌 & #ArshaBaiju 🤩 & @Darshan_Offl ✌
⚡ குஷி படத்துல #SJSuryah கேரக்டர் மாதிரி கதையோட போக்கயே மாற்ற கூடிய ரோல்ல நம்ம
@itisprashanth
👏🔥 Serious ah ve நல்ல ரோல் .. தட் one தண்ணி கேன் பஞ்ச்🙌
⚡ படம் ஆரம்பிச்சு 20 நிமிசம் ஒரே மாதிரி போறது ரிப்பீட்டடா இருந்தாலும் காளி வெங்கட் Entryல இருந்து ஸ்பீட் எடுத்து Total Pre Interval block & Pre Climax portion எல்லாம் செம Interest ah இருந்திச்சு ✌
⚡ செகண்ட் ஆப்ல " மின்சாரம் என் மீது பாய்கின்றதே" Song placement idea - 😂 Total Blast
⚡ BGM & Sound Design 👌
⚡ மொத்தத்துல தமிழ்ல Unique Concept அதே சமயம் குழப்பம் இல்லாம ஈஸியா புரியுற மாதிரி காமெடியாவும் கொஞ்சம் எமோஷனலாவும் சொல்லி இருக்காங்க..தாராளமா பார்க்கலாம் 👍 One more Good movie from
@SKProdOffl" என இந்த நெட்டிசன் தனது விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.
வொர்த்தான படம்: ஜூலை 31ம் தேதி கிங்டம் படம் திரைக்கு வருகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி தமிழில் சுமார் 8க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. அதில், சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ஹவுஸ்மேட்ஸ் படம் கண்டிப்பாக வொர்த்தான படமாக அமையும் என சுந்தர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.
அஜய் ஞானமுத்து விமர்சனம்: இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது எக்ஸ் தளத்தில் கண்டிப்பாக இந்த படம் பிளாக்பஸ்டர் தான் என விமர்சித்துள்ளார். பக்காவான பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்து அறிமுகமாகவுள்ள ராஜவேலுக்கு என் நெஞ்சார்த்த வாழ்த்துக்கள் என்றும் படம் ஆரம்பம் முதல் கடைசி வரை பக்காவாக உள்ளது, நிச்சயம் தியேட்டர்களில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க என டிமான்ட்டி காலனி பட இயக்குநரே சர்டிபிகேட் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











