ஷூட்டிங் சென்றபோது பரிதாபம்.. அணையில் மூழ்கி பிரபல நடிகர் பலியானது எப்படி? திரையுலகம் அதிர்ச்சி!

By

கொச்சி: அணையில் மூழ்கி பிரபல நடிகர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended Video

Bigg Boss Archana twitterல் வெளியேறினார் | Love -Hate வேண்டாம்

பிரபல மலையாள நடிகர், அனில் நெடுமங்காடு. இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

சூப்பர் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் படத்தில் சதீஷ்குமார் என்ற போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார்.

ஸ்டீவ் லோபஸ்

ஸ்டீவ் லோபஸ்

கமாட்டிபாடம், பாவாட, நான் ஸ்டீவ் லோபஸ் உட்பட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனில் நெடுமங்காடு. கடைசியாக பாபம் செய்யாதவர் கல்லெறியட்டே என்ற படத்தில் நடித்திருந்தார். இவர், இப்போது பீஸ் என்ற படத்தில் நடித்து வந்தார். இதில் ஜோஜு ஜார்ஜ் ஹீரோவாக நடிக்கிறார்.

மலங்காரா அணை

மலங்காரா அணை

இதன் ஷூட்டிங் தொடுபுழாவில் நடந்து வருகிறது. இதற்காக அங்கு சென்ற அனில், அங்குள்ள மலங்காரா அணையில் நண்பர்களுடன் நேற்று மாலை குளிக்கச் சென்றார். அப்போது அவர் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென நீரில் மூழ்கினார். அவரைக் காணாததால், அதிர்ச்சி அடைந்த அவர் நண்பர்கள், தேடினர்.

அணையில் மூழ்கி

அணையில் மூழ்கி

சிறிது நேரத்தில் அவர் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். மறைந்த அனில் நெடுமங்காடுக்கு வயது 48. படப்பிடிப்புக்காக சென்ற நடிகர் ஒருவர், அணையில் மூழ்கி உயிரிழந்தது மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இல்லை, அனிலேட்டா

இல்லை, அனிலேட்டா

இதையடுத்து மலையாள திரைத்துறையினர், அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதை உறுதி செய்துள்ள நடிகர் பிருத்விராஜ், இல்லை. சொல்வதற்கு எதுவுமில்லை. உங்கள் ஆத்மா சாந்தியடைட்டும், அனிலேட்டா என்று இரங்கலில் தெரிவித்துள்ளார்.

நொறுங்கி விட்டேன்

நொறுங்கி விட்டேன்

பிருத்விராஜ் சகோதரரும் நடிகருமான இந்திரஜித் கூறும்போது, இதைக் கேட்டதும் நொறுங்கி விட்டேன். இரண்டு நாட்களுக்கு முன் தான் அவருடன் நடித்தேன். அதற்குள் இப்படியொரு செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். அவருடன் நடித்த துல்கர் சல்மான் உட்பட பலர் அனிலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திரையுலகில் சோகம்

திரையுலகில் சோகம்

சினிமா துறையில் இந்த வருடம் பல திறமையானவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் பிரபல மலையாள இயக்குனர் சச்சி மரணமடைந்தார். சில நாட்களுக்கு முன் சூஃபியும் சுஜாதாயும் இயக்குனர் ஷாநவாஸ் உயிரிழந்தார். இப்போது, அனில் நெடுமங்காடும் உயிரிழந்திருப்பது கேரள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Read more about: actor நடிகர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X