சவால் விட்ட மீரா மிதுனும்.. சாகசம் காட்டிய போலீஸும்... எப்படி சிக்கினார்? சுவாரஸ்ய பின்னணி!

சென்னை: நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டது குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை மீரா மிதுனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பெயர் போனவர். அழகிப்போட்டியில் பங்கேற்று பொய்யான தகவலை பட்டத்தை வென்றார்.

இதனை அறிந்த அழகிப் போட்டி நிகழ்ச்சிக் குழு அவரிடம் இருந்து அழகிப் பட்டத்தை பறித்தது. அதன் பிறகு இளம் பெண்கள் பலரிடம் அழகிப் போட்டி நடத்துவதாக கூறி பணம் வசூலித்தாக அவர் மீது காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கூறினர்.

இயக்குநர் சேரன் மீது புகார்

இயக்குநர் சேரன் மீது புகார்

இதனை தொடர்ந்து அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் சக போட்டியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த மீரா மிதுன் இயக்குநர் சேரன் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறினார்.

குறும்படம் போட்ட கமல்

குறும்படம் போட்ட கமல்

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் மீரா மிதுன் கூறியது பொய் என்பதையும் அவர் வேறு என்ன பொய்யை எல்லாம் கூறினார் என்பதையும் குறும்படம் போட்டு காட்டினார் கமல். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன்.

தரக்குறைவாக பேசிய மீரா மிதுன்

தரக்குறைவாக பேசிய மீரா மிதுன்

அந்த ஆத்திரத்தில் விஜய் டிவி மீதும், கமல் ஹாசன் மீதும் மற்றும் சேரன் உட்பட அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் மீதும் சேற்றை வாரியிறைத்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் இயக்குநர்கள் என அனைவரையும் தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டார்.

நடிகைகள் குறித்து ஆபாசம்

நடிகைகள் குறித்து ஆபாசம்

கமல்ஹாசன், விஜய், சூர்யா, தனுஷ் என நடிகர்கள் பலர் குறித்தும் அவதூறாக பேசி வந்தார். இதேபோல் இயக்குநர்கள் பாண்டிராஜ், பாரதிராஜா, நவீன் முகமதலி என பலர் குறித்தும் கீழ்த்தரமாக பேசினார். மேலும் விஜய்யின் மனைவி சங்கீதா குறித்தும் நடிகை ஜோதிகா குறித்தும் ஆபாசமாக பேசினார்.

முன்னணி நடிகைகள் காப்பியடிக்கிறார்கள்

முன்னணி நடிகைகள் காப்பியடிக்கிறார்கள்

நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் தன்னை காப்பியடிப்பதாக கூறினார் மீரா மிதுன். தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்தார் மீரா மிதுன். ஆனால் அதையெல்லாம் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

குற்றப் பின்னணி உடையவர்கள்

குற்றப் பின்னணி உடையவர்கள்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காதலருடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டார் மீரா மிதுன். அதில் பட்டியலின சாதியினர் குறித்து தரக்குறைவாக பேசியிருந்தார் மீரா மிதுன். மேலும் அவர்கள் அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்கள் அதனால்தான் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்றும் கூறினார்.

போலீஸில் குவிந்த புகார்

போலீஸில் குவிந்த புகார்

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் உள்ள பட்டியலின மக்களை வெளியேற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவரது இந்த வீடியோவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. பல்வேறு காவல் நிலையங்களில் அப்பிரிவை சேர்ந்தவர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.

என்னை கைது செய்ய முடியாது

என்னை கைது செய்ய முடியாது

இதனை தொடர்ந்து மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்த சென்னை சைபர் க்ரைம் போலீசார், மீரா மிதுன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். ஆனால் தன்னை கைது செய்வது என்பது நடக்காத ஒன்று.. தன்னை கைது செய்வது என்பது கனவில்தான் நடக்கும் என்றும் போலீசாருக்கு சவால் விட்டு வீடியோ வெளியிட்டார் மீரா மிதுன்.

ஆண்களின் ஆசைக்கு இணங்குவதால்

ஆண்களின் ஆசைக்கு இணங்குவதால்

அதோடு தனக்கு தமிழகத்தில் என்ன பிரச்சனை என பிரதமர் மோடிக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் வீடியோ வெளியிட்டார் மீரா மிதுன். அதில் தமிழ் சினிமா விபச்சார கூடமாக மாறிவிட்டது என்றும், தான் காம்ரமைஸ் செய்து கொள்ளாததால் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் வேற்று மாநில பெண்கள் ஆண்களின் ஆசைக்கு இணங்குவதால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்றும் கூறினார்.

தலைமறைவான மீரா மிதுன்

தலைமறைவான மீரா மிதுன்

போலீசார் முன்பு ஆஜராகாதா மீரா மிதுன், இந்த வீடியோவை தனது யூட்யூபில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார். இந்நிலையில் மீரா மிதுன் போலீசார் முன்பு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கேரளாவில் பதுங்கிய மீரா மிதுன்

கேரளாவில் பதுங்கிய மீரா மிதுன்

அதாவது நடிகை மீரா மிதுன் கேரளாவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அங்கு ரகசியமாக சென்ற போலீசார், மீரா மிதுனை அதிரடியாக கைது செய்தனர். போலீசாரையும் பார்த்ததும் மிரண்டு போன மீரா மிதுன் அவர்கள் அனைவரும் தன்னை துன்புறுத்துவதாக கத்தி கூச்சலிட்டார்.

கத்தியால குத்தி செத்துடுவேன்

கத்தியால குத்தி செத்துடுவேன்

முதல்-அமைச்சர் அவர்களே ஒரு பொண்ணுக்கு இப்படி தான் நடக்கனுமா? ஒரு பொண்ணுக்கு நிஜமாகவே இப்படி தான் நடக்கனுமா? எல்லோரையும் வெளியே போக சொல்லுங்க.. போலீஸ்னா அராஜகம் பண்ணுவீங்களா.. என் போன தர முடியாது. கத்திய எடுங்க.. என்ன குத்திட்டு இங்க இருந்து என்ன வெளியே எடுத்துட்டு போங்க.. நான் இங்கேயே குத்திட்டு செத்துருவேன்.. முதல்-அமைச்சர் அவர்களே, பிரதமர் மோடி அவர்களே, இந்த தமிழ்நாடு போலீஸ் என்ன ரொம்ப டார்ச்சர் பண்றாங்க என கதறினார்.

தப்புக் கணக்கு போட்ட மீரா மிதுன்

தப்புக் கணக்கு போட்ட மீரா மிதுன்

இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் தமிழகம் அழைத்து வந்து விசாரிக்க முடிவு செய்தனர். செய்வதையெல்லாம் செய்து விட்டு கேரளாவுக்கு ஓடிவிட்டால் தப்பித்து விடலாம் என தப்பு கணக்கு போட்டுவிட்டார் மீரா மிதுன். ஆனால் அவரது மிரட்டலுக்கெல்லாம் அஞ்சாமல் ஸ்கெட்ச் போட்டு தூக்கிவிட்டது தமிழக போலீஸ்.

கர்மா இஸ் பூமராங்

கர்மா இஸ் பூமராங்

மீரா மிதுன் கைதுக்கு பிறகு இந்திய அளவில் #MeeraMithun என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டானது. திரை பிரபலங்கள் உட்பட பலரும் அவரது கைதுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் கர்மா இஸ் பூமராங் என குறிப்பிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X