»   »  மூன்று நாள் பட்டினி, கண் மங்கி, மயங்கி விழுந்து... ஈட்டிக்காக அதர்வா சிக்ஸ் பேக் வைத்த கதை!

மூன்று நாள் பட்டினி, கண் மங்கி, மயங்கி விழுந்து... ஈட்டிக்காக அதர்வா சிக்ஸ் பேக் வைத்த கதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அதர்வா நடிப்பில் அறிமுக இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் புதிய படம் 'ஈட்டி'. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் படத்தின் நாயகன் அதர்வா பேசுகையில், "இந்த படத்தின் கதையை தாணு சார்தான் முதல் எனக்கு அனுப்பி வைத்தார். கதையைப் படித்தவுடன் எனக்கு பிடித்துவிட்டது. இந்த கதைக்கு பின்னால் இயக்குநர் வெற்றிமாறனும் இருக்கிறார் என்பதலேயே நான் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்.


How Atharva gets 6 pack body for Eetti

ரவி அரசு மிக சிறந்த இயக்குநர். நான் என்னுடைய முயற்சிகளில் உறுதியாக இருந்தேன். மேலும் இந்த படத்துக்காக சிக்ஸ் பாக் வேண்டும் என்பதால் மிகப் பெரிய அளவில் உணவுக் கட்டுபாட்டு முறையைக் கடைப்பிடித்து வந்தேன். அதனாலேயே எனக்கு படபிடிப்பு தளத்தில் அடிக்கடி மயக்கம் வரும். எனக்கு சில நேரங்களில் கண் மங்கலாகத் தெரியும். எதிரில் என்ன இருக்கிறது என்றே எனக்கு தெரியாது. கேமராவை கூட நான் தேடிக் கொண்டுதான் இருப்பேன். அந்த நேரங்களில் 'நான் ஏதாவது ஒரு திசையை நோக்கி நடிக்கிறேன் நீங்கள் அதைப் படம் பிடித்து கொள்ளுங்கள்' என்று கூறிவிடுவேன்.


பாக் மில்கா பாக் படத்தில் நடிகர் இயக்குநர் பர்ஹான் அக்தரின் நடிப்பைப் பார்த்து நான் மிரண்டுவிட்டேன். அவருடைய நடிப்புதான் இந்த படத்தில் நான் நடிக்க மிக பெரிய பலமாக இருந்தது. பாக் மில்க்ஹா பாக் படம்தான் நான் கடுமையாக உழைக்க என்னுள் வெறியை உண்டாக்கியது," என்றார்.


நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், "இந்த ஈட்டி படத்தின் கதையை முதலில் நான் தயாரிப்பாதாகத்தான் இருந்தது. பின்னர் அது தாணு சாரிடம் சென்று மைகேல் ராயப்பன் சாரின் கைக்கு சென்றுள்ளது. நான் தயாரித்திருந்தால் படத்தை இவ்வளவு பெரிதாக தயாரித்திருக்கமாட்டேன்.


ஜி.வி.பிரகாஷுடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அவருடன் ஒரு கிரீன் டீ குடித்து கொண்டே ஒரே இரவில், ஒரு பாடலின் கம்போசிங்கை முடித்துவிடலாம். நாயகன் அதரவா படத்துக்கு கொடுத்துள்ள உழைப்பு பெரியது. மூன்று நாட்கள் தொடர்ந்து தண்ணீர் அருந்தாமல் இருந்தால்தான் சிக்ஸ் பேக் வரும் என்று சொல்வார்கள். நாயகன் அதர்வா தண்ணீர் அருந்தாமல் இந்த படத்துக்காக எவ்வளவு உழைத்திருப்பார் என்பது பாடல் மற்றும் ட்ரைலரை பார்க்கும் போது தெரிகிறது," என்றார்.


விழாவில் நாயகி ஸ்ரீ திவ்யா, படத்தின் தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன், செரொபின் ராய சேவியர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர் சரவணன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, கதிரேசன், தேனப்பன் பி.எல், கே.ராஜன், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

English summary
Actor Atharva, who played in lead role in Eetti movie says that he has observed very hard diet for the movie.
Please Wait while comments are loading...