Don't Miss!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- News
அசத்தலாக மாறப்போகும் 'வாட்ஸ்-அப்'.. வருகிறது 5 புதிய அப்டேட்கள்.. அடடே! என்னென்ன வசதிகள்!
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பாலாஜி வடிவேலு பாலாஜி ஆன கதை.. எல்லாத்துக்கும் காரணம் அந்த சூப்பர் ஹிட் பாடல் தானாம்!
சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜியின் திடீர் மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
2020ம் ஆண்டு சினிமா கலைஞர்களுக்கு ஒரு சாபக் கேடான ஆண்டாகவே மாறிவிட்டது.
ஏகப்பட்ட திரைத்துறையை சார்ந்தவர்கள், இளம் வயதிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது.
வடிவேலு
பாலாஜி
மரணம்..
'கடவுள்
மேல
கொஞ்சம்
வெறுப்பும்
வருது..'
ரோபோ
சங்கர்
உருக்கம்!

படிப்பு ஏறல
மதுரையை சேர்ந்த பாலாஜி, அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது படிப்பு ஏறாத காரணத்தால், படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டார். அதன் பிறகு என்ன செய்யப் போகிறோம் என தெரியாமல் தவித்து வந்த நிலையில், நடனத்தில் பாலாஜிக்கு ஈடுபாடு வரத் தொடங்கியது.

சின்ன சின்ன மேடைகளில்
நடன நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றும், சின்ன சின்ன மேடைகளில் ஏறியும் நடனமாடி வந்தார் பாலாஜி. அவரது நடனத் திறமையை பார்த்து பலரும் பாராட்டினார்கள், சினிமாவில் நடனக் கலைஞராக வர வேண்டும் என நினைத்த பாலாஜி எப்படி காமெடியன் வடிவேலு பாலாஜியாக மாறினார் என்பது க்யூட்டான ஒரு குட்டி ஸ்டோரி.

காதலன் பாடல் தந்த மாற்றம்
காதலன் படத்தில் பிரபலமான ஊர்வசி ஊர்வசி பாடலுக்கு மேடையில் ஆட வேண்டிய சூழ்நிலையில், பாலாஜியின் நண்பர் பிரபுதேவா ஆகவும், கருப்பாக இருப்பதால், வடிவேலு ஆக பாலாஜியையும் நடனமாட கூறியுள்ளனர். அதன் பிறகு, நமக்கு வடிவேலு பாடி லேங்குவேஜ் நல்லா வருதே என யோசித்த அவர், அதன் பிறகு வடிவேலு பாலாஜியாகவே மாறியுள்ளார்.

பாட்டியை கலாய்த்து
மேலும், வீட்டில் இருந்த தனது பாட்டியை பங்கமாக கலாய்த்து அடிக்கடி பாலாஜி காமெடி செய்வது வழக்கம். அவரது காமெடியை பார்த்த அவரது பாட்டி, அப்படியே வடிவேலு மாதிரியே பண்றியே டா என பாராட்டி உள்ளார். தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் வடிவேலு போலவே நடித்து காட்டியும், வசனம் பேசியும் ஒத்திகை பார்த்து, எல்லாம் ஓகே ஆன பிறகு, வடிவேலு வேஷங்களை போட்டு நாடகங்களில் கலக்கினார். பின்னர், கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சினிமாவில் பெரியாளாக வேண்டும்
வைகைப் புயல் வடிவேலுவை போலவே தானும், காமெடியில் கலக்கி சினிமாவில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசை நடிகர் வடிவேலு பாலாஜிக்கு நிறையவே இருந்தது. ஆனால், கடை நிலை சினிமா கலைஞர்களின் வறுமை நிலை இவரையும் வாட்ட, சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல், உயிரிழந்த சோகம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.