twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுப்ரமணியபுரம் ரிலீஸாகி 12 வருடம்.. இந்த நாளை எப்படி மறக்க முடியும்..? சசிகுமார் டச்சிங் போஸ்ட்!

    By
    |

    சென்னை: சுப்ரமணியபுரம் படம் வெளியாகி 12 வருடம் ஆனதை அடுத்து டச்சிங் பதிவு போட்டிருக்கிறார், இயக்குனரும் நடிகருமான சசிகுமார்.

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சினிமா பலரை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. (இப்போ லாக்டவுன் பிரேக்).

    ஹீரோக்கள், ஹீரோயின்ஸ், துணை நடிகர்கள், காமெடியன்கள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் என மொத்த திறமைகளும் முட்டி மோதுகின்றன வெள்ளிக்கிழமைகளில்!

    இதை விட சின்ன டிரெஸ் கிடைக்கலையா.. கிராப் டாப்பில் அசத்தும் அதா ஷர்மா.. வைரலாகும் போட்டோ!இதை விட சின்ன டிரெஸ் கிடைக்கலையா.. கிராப் டாப்பில் அசத்தும் அதா ஷர்மா.. வைரலாகும் போட்டோ!

    சுப்ரமணியபுரம்

    சுப்ரமணியபுரம்

    இதில் வெற்றி, தோல்வியை பார்க்கத் தேவையில்லை என்றாலும் வெற்றிதான் சினிமாவின் விலாசமாகவே இருக்கிறது. அப்படி கடந்த 12 வருடத்துக்கு முன் வந்து சத்தம் போடாமல் ஹிட்டடித்த படம், சுப்ரமணியபுரம். இந்தப் படமும் சிலரை அதிரடியாக அறிமுகப்படுத்தியது. அந்த தெத்துப்பல் ஹீரோயின் ஸ்வாதி, இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் என சிலருடன் சசிகுமார் என்கிற இளம் இயக்குனரையும் அலட்டலில்லாத நடிகரையும் தந்தது.

     கண்களிரண்டால்

    கண்களிரண்டால்

    மதுரைக்கார ஜெய், நெகட்டிவ் கேரக்டரில் சமுத்திரக்கனி, உள்ளூர் நண்பன் கஞ்சா கருப்பு, மைக்செட் ஜித்தன் மோகன், நண்பன் டும்கான் என ஒவ்வொருவரையும் அந்தந்த கேரக்டர்களாகவே காட்டிய படம் அது. எண்பதுகளின் வாழ்வை இயல்பாகச் சொன்ன விதத்தில் பாராட்டப்பட்ட இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். கண்களிரண்டால் பாடலும் மரண பயத்தைக் காட்டிட்டான் பரமா என்பது போன்ற இயல்பான வசனங்களும் படத்துக்குப் பலமாக இருந்தன.

     12 வருடங்கள்

    12 வருடங்கள்

    விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் சுப்பிரமணியபுரம். சசிகுமாருக்கு சினிமா பின்னணி இருந்தாலும் இயக்குனர் பாலாவிடமும் அமீரிடமும் உதவி இயக்குனராகப் பணியாற்றி சினிமா கற்று வந்தவர். அடுத்தடுத்து நடிகராகவும் இயக்குனராகவும் உச்சம் தொட்டிருக்கிறார், இப்போது. அந்தப் படம் வெளியாகி இன்றுடன் 12 வருடங்களாகி விட்டன.

     எப்படி மறக்க முடியும்?

    எப்படி மறக்க முடியும்?

    இந்நிலையில், தனது சினிமா வாழ்க்கைக்கு வெற்றிமாலை போட்ட இந்த நாளை எப்படி மறக்க முடியும்? என்று கேட்டிருக்கிறார் சசிகுமார். இதுபற்றி ட்விட்டரில் அவர், 'எப்படி மறக்க முடியும் இந்த நாளை என்னால்? ஜூலை 4. 12 வருடம் ஆகிவிட்டது. கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் மொத்தக் குடும்பமும் ஆர்வத்துடன் அமர்ந்திருந்தது.. எங்கள் முதல் தயாரிப்பின் ரிசல்ட்டை காண' என்று கூறியுள்ளார். இதற்காகப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    English summary
    'How can I forget this day?' sasikumar on 12Years Of Subramaniapuram
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X