twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எலிமினேஷனில் இருந்து தப்பிக்க என்ன செய்யணும்...ரூட் போட்டு கொடுத்த பிக்பாஸ்

    |

    சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு வாரங்களை நிறைவு செய்துள்ளது. கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில், இதுவரை இரண்டு பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    அருண் விஜய்யின் பார்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியானது!அருண் விஜய்யின் பார்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியானது!

    மீதமுள்ள 16 பேரில் அடுத்து வெளியேற போகிறவர் யார் என்பதை தீர்மானிப்பதற்கான எலிமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது. கடந்த வாரம் 15 பேர் நாமினேட் ஆன நிலையில், இந்த வாரம் 9 பேர் நாமினேட் ஆகி உள்ளனர். தலைவர் சிபியை நாமினேட் செய்ய முடியாது.

    லக்சுரி பட்ஜெட் டாஸ்க்

    லக்சுரி பட்ஜெட் டாஸ்க்

    இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் இமான் அண்ணாச்சி லக்சுரி பட்ஜெட் டாஸ்க் விதிமுறைகளை வாசித்தார். அதில் மியூசியம் போல் மாற்றப்படும் பிக்பாஸ் வீட்டில் ஐந்து இடங்களில் காயின்கள் வைக்கப்பட்டிருக்கும். போட்டியின் இறுதியில் அதிக காயின்களை யார் கைப்பற்றுகிறாரோ அவர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருந்தால், காப்பாற்றப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காப்பாற்ற பட போவது யார்

    காப்பாற்ற பட போவது யார்

    இந்த ப்ரோமோவில் ஐக்கி பெர்ரி, மதுமிதா, வருண் ஆகியோர் தலா ஒரு காயின்களை கைப்பற்றுவது போல் காட்டப்படுகிறது. இவர்களில் அதிக காயினை கைப்பற்றி, 9 பேரில் யார் ஒருவர் காப்பாற்றப்பட போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

    எபிசோடில் வருமா

    எபிசோடில் வருமா

    ஆனால் ப்ரோமோக்கள் மட்டும் சுவாரஸ்யமாக காட்டப்படுகிறது. பல ப்ரோமோக்களில் இடம்பெறும் சீன்கள் அன்றைய எபிசோடிலோ அல்லது அன்சீனிலோ காட்டப்படுவதில்லை. அப்படியானால் அந்த சீன்கள் எங்கே, அவற்றை எப்போது காட்டுவார்கள் என ரசிகர்கள் ஏற்கனவே கேட்டு வருகிறார்கள்.

    சுவாரஸ்யம் இல்லையே

    சுவாரஸ்யம் இல்லையே

    ப்ரோமோக்களில் இருக்கும் சுவாரஸ்யம் எபிசோடில் இருப்பதில்லை. உப்பு சப்பில்லாமல் போய் விடுவதாக பலர் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் இருக்கும் சுவாரஸ்யம் மற்றும் டாஸ்க் எபிசோடில் இருக்குமா என சந்தேகம் எழுப்பி உள்ளனர் நெட்டிசன்கள்.

    குறை கூறும் ரசிகர்கள்

    குறை கூறும் ரசிகர்கள்

    கடந்த சீசன்களில் இருந்ததை போல் இல்லாமல் இந்த சீசனின் சுவாரஸ்யம் குறைவாக உள்ளது. பிக்பாஸ் கூட அதிகம் பேசாமல் இருக்கிறார். அவர் பேசுவதில்லையா அல்லது அந்த சீன்கள் காட்டப்படுவதில்லையா, எடிட்டிங் சரியில்லை என பல விதங்களில் ரசிகர்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார்கள்.

    English summary
    In bigg boss tamil season 5 promo, Annachi reads the rules of luxuary budget task. Coins will be placed in five locations in the Big Boss house, which will be converted into a museum. It has been reported that whoever captures the most coins at the end of the competition will be saved if he is nominated this week.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X