twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாய்காட் பிரசாரத்தைக் கடந்து பிரம்மாஸ்திரம் வெற்றி? பரிதாபமான நிலையில் அமீர்கான், அக்சய்குமார்

    |

    மும்பை: ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரம் திரைப்படம், நெட்டிசன்களால் பாய்காட் செய்யப்பட்டது.

    ஆனால், நெட்டிசன்களில் ட்ரோலையும் கடந்து முதல் நாளில் 75 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

    அமீர் கான், அக்சய் குமார் படங்கள் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், தற்போது பிரம்மாஸ்திரம் படம் பாய்காட்டை கடந்து வெற்றிப் பெற்றுள்ளது.

    கோவில் கோவிலாக சுற்றும் ஷிவானி..அப்படி என்ன வேண்டுதலா இருக்கும்?கோவில் கோவிலாக சுற்றும் ஷிவானி..அப்படி என்ன வேண்டுதலா இருக்கும்?

    பாலிவுட்டை அதிர வைக்கும் பாய்காட்

    பாலிவுட்டை அதிர வைக்கும் பாய்காட்

    கடந்த சில மாதங்களாக இந்தித் திரையுலகம் கடும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. பெரிய பட்ஜெட்டில் வெளியாகும் படங்களையும், அதில் நடித்த நடிகர்களையும் புறக்கணிக்க வேண்டும் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இந்த பாய்காட் சர்ச்சையில், அமீர்கான், அக்சய் குமார், ரன்வீர் சிங், கங்கனா ரணாவத் என பலரும் பாதிக்கப்பட்டனர். நடிகர்கள் முன்பு எப்போதாவது பேசிய சில சர்ச்சையான கருத்துகளை பின்னணியாக வைத்து இப்படி பாய்காட் செய்யப்பட்டு வருகின்றன.

    பாய்காட்டில் சிக்கிய பிரம்மாஸ்திரம்

    பாய்காட்டில் சிக்கிய பிரம்மாஸ்திரம்

    இந்நிலையில், நேற்று (செப் 9) வெளியான பிரம்மாஸ்திரம் திரைப்படமும், கடந்த சில நாட்களாக பாய்காட் பிரச்சினையை சந்தித்தது. இந்தப் படத்தில் நடித்த ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். "நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன்" என சில வருடங்கள் முன்னர் ரன்பீர் கபூர் பேசியிருந்த வீடியோவை வைரலாக்கி, பிரம்மாஸ்திரம் படத்தை பாய்காட் செய்தனர். மேலும், உஜ்ஜைனியில் உள்ள காளியின் கோயிலுக்குள் செல்லவிடாமலும் அவர்களை புறக்கணித்தனர்.

    பாய்காட்டை பிரேக் செய்த பிரம்மாஸ்திரம்

    பாய்காட்டை பிரேக் செய்த பிரம்மாஸ்திரம்

    பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பிரம்மாஸ்திரம் பாய்காட் பிரச்சினையால் என்னவாகும் என்ற கேள்வி சினிமா ஆர்வலர்களிடம் எழுந்தது. அதேபோல், சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொள்ள நெபோடிசம் தான் காரணம். குறிப்பாக ரன்பீர் கபூருக்கும் இதில் தொடர்புள்ளதாகவும், இப்போது கர்மா அவரை திருப்பி அடிக்கும் எனவும் ட்ரோல் செய்யப்பட்டன. ஆனால், இதையெல்லாம் கடந்து பிரம்மாஸ்திரம் படம், முதல் நாளில் 75 கோடி ரூபாய் வசூலித்து நெட்டிசன்களை சுளுக்கெடுத்துள்ளது.

    அமீர்கான், அக்சய் குமார் நிலைதான் பரிதாபம்

    அமீர்கான், அக்சய் குமார் நிலைதான் பரிதாபம்

    பாய்காட் பிரசாரத்தைக் கடந்து பிரம்மாஸ்திரம் திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. முதல் நாளிலேயே 75 கோடி ருபாய் வசூல் செய்து இந்தித் திரையுலகை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. ஆனால், சமீபத்தில் வெளியான அமீர்கானின் லால் சிங் சந்தா, அக்சய் குமாரின் பிருத்விராஜ், ரக்‌ஷா பந்தன் படங்கள் படுதோல்வியடைந்தன. இதனால், ரன்பீர் கபூரின் பிரம்மாஸ்திரம் படம் பாலிவுட்டுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

    English summary
    Producer Karan Johar has announced that Brahmastram has collected 75 crore on the first day. Aamir Khan and Akshay Kumar's films failed due to the boycott issue. In this case, Brahmastra has succeeded in overcoming the boycott campaign and the Hindi film industry is relieved.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X