அவர் செய்த தியாகம்தான் காரணம்.. விஜய் - விஜய் சேதுபதி சேர்ந்தது எப்படி? வெளிவராத பின்னணி!

Recommended Video

Thalapathy64 Update:தளபதி 64 வில்லன் முடிவாயிச்சு

சென்னை: நடிகர் விஜய்யின் 64வது படத்தில் நடிக்க விஜய் சேதுபதி எப்படி ஒப்புக்கொண்டார் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தளபதி 64 படம் வேகமாக தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி உடன் லோகேஷ் கனகராஜ் டீம் இதற்காக பேசி வருகிறது. ஆம் தளபதி 64 படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார் என்கிறார்கள்.

என்ன படம்

என்ன படம்

இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக தற்போது லலித் குமார் இருக்கிறார். இவர் வேறு யாரும் கிடையாது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை சேர்ந்தவர். இவர் மூலம்தான் தற்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணி உருவானது என்று கூறுகிறார்கள்.

எப்படி தெரியும்

எப்படி தெரியும்

7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தலைவர்தான் லலித் குமார். இந்த நிறுவனம்தான் தற்போது துக்ளக் தர்பார் படத்தை எடுத்து வருகிறார். துக்ளக் தர்பார் படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். அதிதிராவ் ஹெய்தாரி நாயகியாக நடிக்கிறார்.

இயக்குனர்

இயக்குனர்

இதை புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். இந்த படத்திற்கு விஜய் சேதுபதி கால் சீட் கொடுத்து இருந்தார். இதனால் அவரால் விஜய் 64 படத்தை ஒப்புக்கொள்ள முடியாமல் போனது. இந்த நிலையில் லலித் குமார் தற்போது அந்த கால்ஷீட்டை மாற்றி கொடுக்க சொல்லிவிட்டாராம்.

அட இப்படியா

அட இப்படியா

ஆம், துக்ளக் தர்பார் படபிடிப்பில் பிறகு கலந்து கொள்ளலாம். இப்போது விஜய் 64ல் நடியுங்கள் என்று லலித் குமார் கேட்டு இருக்கிறார். விஜய் சேதுபதியும் இதற்கு ஒப்புக்கொண்டுவிட்டார். லலித் குமார் செய்த தியாகம் மூலமாகத்தான் இந்த கூட்டணி உருவாகி இருக்கிறது.

செம பாஸ்

செம பாஸ்

லலித் குமார் தன்னுடைய தயாரிப்பு மூலம் உருவாகும் படத்தை விட, விஜய் மற்றும் விஜய் சேதுபதி சேர்ந்து படம் பண்ணுவதுதான் முக்கியம் என்று கருதி உள்ளார். இதனால் அவர் தன்னுடைய பட ஷூட்டிங்கை தள்ளி வைத்துவிட்டு, விஜய் படத்திற்காக கால்ஷீட் வாங்கி கொடுத்துள்ளார்.

நிறைய முறை பேசினார்

நிறைய முறை பேசினார்

இவர் பலமுறை போய் இதற்காக விஜய் சேதுபதியிடம் பேசியுள்ளார். அதேபோல் படத்தின் இயக்குனரிடமும் பேசி உள்ளார். இதனால் விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படம் வெளியாக தாமதமாகும் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X