ரோலக்ஸ் கேரக்டர எப்படி நீ ஒத்துக்கிட்ட... சூர்யாவிடம் ஆச்சர்யமாக கேட்ட கார்த்தி

சென்னை: இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கியுள்ள இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் தற்சமயம் கார்த்தி சர்தார் என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

விருமன் திரைப்படத்தின்போதும் சரி இப்போதும் சரி, தொடர்ச்சியாக பல பேட்டிகளை கொடுத்த வருகிறார் நடிகர் கார்த்தி.

அப்படி சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்து கார்த்தி சில தகவல்களை கூறியிருக்கிறார்.

விக்ரம் 2

விக்ரம் 2

விக்ரம் திரைப்படத்தில் முழு நீள கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களை விட கடைசி சில நிமிடங்கள் மட்டுமே தோன்றிய நடிகர் சூர்யாவிற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. படம் வெளியானபோது அவருடைய கதாபாத்திரத்தின் பெயரான ரோலக்ஸ் இணையதளம் மூலம் வைரலாகி இருந்தது. அடுத்த பாகம் எப்போது வரும்? விக்ரம் கமல், கைதி கார்த்தி மற்றும் விக்ரம் ரோலக்ஸ் இந்த மூன்று கதாபாத்திரங்களும் எப்போது சந்தித்துக் கொள்ளும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

ரோலெக்ஸின் சம்பளம்

ரோலெக்ஸின் சம்பளம்

விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தவுடன் நடிகர் சூர்யாவிற்கு இல்லம் தேடிச் சென்று ரோலக்ஸ் கை கடிகாரம் ஒன்றை பரிசளித்தார் நடிகர் கமல். அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத்திடம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், கமலஹாசன் உங்களுக்கு என்ன கொடுத்தார் என்று கேட்கப்பட்டபோது எனக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்தார் என்று கூறினார். அதேபோலத்தான் விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டபோதும் எனக்கு அவருடன் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என்று கூறியுள்ளார். இவர்கள் இருவருமே சம்பளம் வாங்கிதான் படத்தில் பணிபுரிந்தார்கள் ஆனால் சூர்யா சம்பளம் வாங்காமல் நடித்திருந்தார். அதன் காரணமாகத்தான் அவருக்கு கை கடிகாரம் பரிசளிக்கப்பட்டதாக அப்போது பேசப்பட்டது.

வில்லன் சூர்யா

வில்லன் சூர்யா

24 படத்தில் தானே கதாநாயகனாக நடித்தபோது அதன் வில்லன் கதாபாத்திரத்திலும் சூர்யா நடித்திருப்பார். ஆனால் முழுக்க முழுக்க வில்லனாக வேறு நடிகர் படத்தில் அவர் நடித்ததில்லை. ரோலக்ஸ்தான் அவருடைய முழு நீள வில்லன் கதாபாத்திரம். சூர்யா வில்லனாக நடிக்க ஒப்பந்தமானபோது கார்த்தி மிகவும் ஆச்சரியப்பட்டாராம். காரணம் எந்த ஒரு கதாநாயகனும் வில்லனாக நடிக்க முன் வரமாட்டார்கள். நீ எப்படி ஒப்புக் கொண்டாய் என்று கார்த்தி கேட்டிருக்கிறார்.

ஆச்சர்யப்பட்ட கார்த்தி

ஆச்சர்யப்பட்ட கார்த்தி

அதற்கு, நீண்ட காலமாக வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த வாய்ப்பு கமல் சாரின் மூலம் வந்ததால் அவருக்காகத்தான் நடித்தேன் என்று சூர்யா கூறினாராம். அந்தப் படத்தில் ஒரு சில நாட்கள்தான் ஷூட்டிங்கில் கலந்து கொண்டாராம் சூர்யா அப்போது இவ்வளவு பெரிய வரவேற்பு அந்தக் கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் என்று கார்த்திக்கு தெரியாதாம். திரையரங்கில் பார்த்தபோதுதான் பிரம்மித்து போனதாக கார்த்தி கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X