Shankar: பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு கிளாப் போர்ட் ரொம்ப முக்கியம்.. அது இல்லாமல் வேலை பார்க்கவே மாட்டாராம்!
சென்னை: இயக்குநர் ஷங்கர் தமிழ் சினிமாவை மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவையே பாலிவுட் கடந்து ஹாலிவுட்டுடன் மோத வைத்தவர். ஆனால் அவரது கடைசி இரண்டு படங்களான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்கள் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய தோல்விப் படங்களாக மாறியது. இப்படி இருக்கும்போது, படத்தின் ப்ரீ புரெடக்ஷன், புரெடக்ஷன் மற்றும் போஸ்ட் புரெடக்ஷன் என எல்லா கட்டங்களிலும் ஷங்கர் எப்படி வேலை செய்கிறார் என்பது குறித்து நெருங்கிய வட்டத்தில் இருந்து கிடைத்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெருங்கிய வட்டத்தில் இருந்து வந்த தகவலின் படி, " ஷங்கருக்கு எள் என்று சொன்னால் எண்ணெயாக நிற்கும் உதவியாளர்களோ படக்குழுவினரோ தேவையில்லை. அவருக்கு எள் என்றால் எள்ளாக மட்டுமே நிற்கும் உதவியாளர்களும் படக்குழுவினரும் மட்டுமே தேவை. ஷங்கருக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் அது கட்டாயம் வேண்டும். அது இல்லாமல் அவர் படப்பிடிப்பை அடுத்த கட்டத்திற்கு கூட நகர்த்த மாட்டார்.
படப்பிடிப்புத் தளத்தில் தொடங்கி படத்தின் கடைசி எடிட் முடியும் வரை படத்தின் ஸ்கிரிப்ட் கையில் இருக்கும். ஸ்கிரிப்ட்டில் அவர் என்ன எழுதி உள்ளாரோ, அது தான் ஃப்ரேமிலும் வரவேண்டும். அது மட்டுமல்லாமல் டயலாக் உட்பட அவர் என்ன எழுதி உள்ளாரோ அது தான் இருக்க வேண்டும், கொஞ்சம் கூட கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கக்கூடாது.

வாத்தியார்: படக் குழுவினரிடம் ஒரு வேலையை சொல்லுகிறார் என்றால், அந்த வேலை அவர் சொன்னது போல் நடக்கவில்லை என்றால், அதற்கு காரணம் கேட்பார். அவர்கள் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்வார். உப்புச்சப்பில்லாத காரணங்கள் எல்லாம் ஷங்கரிடம் எடுபடாது. ஷங்கரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஷ்ங்கர் ஒரு ஹெட் மாஸ்டரை போன்றவர். அவர் மிகவும் ஸ்ட்ரிக்ட்டான வாத்தியார்.
கம்பேக்: இயக்குநர் ஷங்கர் இப்போது அடுத்தடுத்து இரண்டு தோல்விப் படங்களை கொடுத்துவிட்டார் என்பதற்காக அவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது. குறிப்பாக 3 மணி நேர படத்திற்கு 7 மணி நேர புட்டேஜ் உடன் எடிட்டிங்கிற்கு போகிறார் என்ற விமர்சனம். ஆனால் ஷங்கர் வெற்றிப் படங்கள் கொடுத்த போதும் இதுபோலத்தான் செய்தார். அப்போது அதனை யாரும் கேள்விக்கு உட்படுத்தவில்லை. தோல்விப் படங்களாக மாறியதால், இவ்வாறு விமர்சிக்கபடுகிறார். எல்லோருக்கும் சரிவு என்பது அவரவர் தொழில் வாழ்க்கையில் நடக்கும். அதன் அடிப்படையில் பார்த்தால், இது ஷங்கரின் சரிவாக இருக்கலாம். அதே நேரத்தில் கம் பேக் கொடுப்பது என்பது ஷங்கர் போன்ற இயக்குநருக்கு பெரிய விஷயமல்ல. அவரது கம்பேக் என்பது இண்டஸ்ட்ரி ஹிட்டாக இருக்கும்" என தெரிவித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் குறித்த இந்த தகவல்கள் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











