பொண்டாட்டியை நன்றாக பார்த்துக் கொள்கிறார் தனுஷ்: ரஜினி பெருமிதம்

By Siva

Recommended Video

மாத்தி மாத்தி புகழ்ந்துகொண்ட ரஜினி ,தனுஷ்- வீடியோ

சென்னை: மாப்பிள்ளை தனுஷ் தன் மகள் ஐஸ்வர்யாவை நன்றாக பார்த்துக் கொள்வதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். காலா இசை வெளியீட்டு விழாவையே மிக பிரமாண்டமாக நடத்தி ஜமாய்த்துவிட்டார் தனுஷ்.

நிகழ்ச்சியில் ரஜினி பேசியதாவது,

வுண்டர்பார்

வுண்டர்பார்

அடுத்து என்ன படம் பண்ணலாம் என்று நினைத்தபோது வேடிக்கையாக ஐஸ்வர்யாவிடம் கேட்டேன். ஏம்மா, உங்க வுண்டர்பார்ல வந்து உங்க புருஷனை வச்சு மட்டும் தான் படம் எடுப்பீங்களா, மத்தவங்கள வச்சு எடுக்க மாட்டீங்களா என்று கேட்டேன். நம்மை எல்லாம் கண்ணுக்குத் தெரியாதா, அவர் தான் ஹீரோவான்னு கேட்டதற்கு அப்பா எனக்கு இது எல்லாம் தெரியாது, நீங்க அவரிடமே கேளுங்க என்றார் ஐஸ்வர்யா.

தனுஷ்

தனுஷ்

தனுஷிடம் ஏதாவது ஐடியா இருக்கான்னு கேட்டதற்கு நீங்கள் கேட்காமல் நான் எப்படி கேட்பது அப்படின்னு சொன்னாங்க. நான் ஒரு படம் கொடுத்தால் பண்ணுவீங்களா என்று கேட்டதற்கு கண்டிப்பாக பண்ணுவேன் அப்பா என்றார்.

மனிதன்

மனிதன்

தனுஷ் என்னுடைய மாப்பிள்ளை என்பதற்காக சொல்லவில்லை அவர் ஒரு அருமையான பையன். அப்பா, அம்மாவை தெய்வமாக மதிக்கிறார். பொண்டாட்டியை நன்றாக பார்த்துக் கொள்கிறார். நல்ல அப்பா, நல்ல மாப்பிள்ளை, நல்ல மனிதன், நல்ல திறமைசாலி.

அரசியல்

அரசியல்

வெற்றிமாறன் ஒரு கதை சொன்னார். அருமையான கதை ஆனால் அரசியல். அப்போது எனக்கு அரசியலுக்கு வரும் ஐடியா இல்லை. ஜனங்களை நான் மறுபடியும் குழப்ப ஆசைப்படவில்லை. தயவு செய்து இந்த படம் வேண்டாம் என்றேன்.

காலா

காலா

அப்போது தான் ரஞ்சித் சாரை அழைத்து ஏதாவது ஐடியா இருக்கா என்று கேட்டேன். தாராவியில் வசிக்கும் தமிழ் மக்களை பற்றி படம் எடுக்கலாமே என்றேன். ரஞ்சித் தாராவிக்கு சென்றே மக்களை பார்த்து கதை எழுதிவிட்டு வந்தார். அப்படித் தான் தனுஷ் என் படத்தை தயாரித்தார் என்றார் ரஜினி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X