முருகதாஸுக்கு ஓரம் கட்டும்போது, ஆடை இயக்குநருக்கு மட்டும் எப்படி ஒர்க்அவுட் ஆச்சு?
Recommended Video
சென்னை: ஆடை படத்தில் நிர்வாண காட்சியை படமாக்கியும் அது எப்படி கசியாமல் இருந்தது என்பது தெரிய வந்துள்ளது.
ரத்ன குமார் இயக்கத்தில் அமலா பால் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆடை படம் வரும் 19ம் தேதி ரிலீஸாகிறது. படத்தின் டீஸர், ட்ரெய்லரை பார்த்தவர்கள் அமலா பாலின் துணிச்சலை பாராட்டியுள்ளனர்.

அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ளதை விமர்சிப்பவர்கள் விமர்சித்தாலும் பாராட்டுபவர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினிகாந்தை வைத்து தர்பார் படத்தை இயக்கி வரும் ஏ.ஆர். முருகதாஸ் காட்சிகளின் வீடியோ கசிவதால் டென்ஷனில் உள்ளார்.
அவர் என்ன தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தாலும் வீடியோ அல்லது புகைப்படங்கள் தொடர்ந்து கசிகின்றது. இந்நிலையில் ரத்ன குமாரோ அமலா பாலை வைத்து நிர்வாண காட்சியையே சத்தமில்லாமல் படமாக்கியுள்ளார். அந்த காட்சி கசியாமல் பார்த்துக் கொண்டார்.
செட்டில் 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செட்டிற்குள் வருவதற்கு முன்பு சோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களின் செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டனர். நிர்வாண காட்சியை படமாக்கிய பிறகே செல்போன்கள் அவர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த 15 பேர் மீது உள்ள நம்பிக்கையில் தான் தைரியமாக நிர்வாண காட்சியில் நடித்தேன் என்கிறார் அமலா பால். ஆடை செட்டில் நான் பந்த்ராலி போன்று உணர்ந்தேன்(15 கணவர்கள்) என்று கூறி சிரித்துள்ளார் அமலா பால். ஆடை படத்தில் அவர் துணிச்சலான காட்சிகளில் நடித்துள்ளதால் அவரின் கேரக்டர் பற்றி சமூக வலைதளங்களில் தவறாக பேசுகிறார்கள். அதை பார்த்த அமலா பாலோ, பேசுபவர்கள் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். நாம் விளக்கம் அளித்தாலும் அவர்களுக்கு எது தேவையோ அதை மட்டுமே கேட்பார்கள். அதனால் அவர்களை எல்லாம் கண்டுகொள்ளக் கூடாது என்கிறார்.

முருகதாஸும் தான் செட்டிற்கு வருபவர்களிடம் செல்போன்களை வாங்கி வைத்துள்ளார். அப்படி இருந்தும் வீடியோ கசிகிறது. தர்பார் போட்டோஷூட்டில் இருந்தே இந்த கசிவு பிரச்சனை உள்ளது. யாரோ படக்குழுவை சேர்ந்தவர் தான் வேண்டும் என்றே செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாவம் முருகதாஸ், ஒரு படத்தை எடுத்து முடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். இனியாவது எந்த வீடியோவும் வெளியாகாமல் இருக்கட்டும்.


Click it and Unblock the Notifications











