16 வயது மகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அழகி நடிகை
மும்பை: பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தன் மூத்த மகள் ரினீ 16 வயதை அடைந்ததும் அவருக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
பிரபஞ்ச அழகிப் பட்டம் பெற்ற சுஷ்மிதா சென் நடிகையானார். 43 வயதாகும் சுஷ்மிதாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் ரொஹ்மான் ஷால்(28) என்பவரை காதலித்து வருகிறார்.

சுஷ்மிதா ரினீ, அலிஷா ஆகிய இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சுஷ்மிதா ரினீயை கடந்த 2000ம் ஆண்டிலும், அலிஷாவை 2010ம் ஆண்டிலும் தத்தெடுத்தார். ரினீ அண்மையில் நடந்த தேர்தலில் வாக்களித்துவிட்டு அம்மாவுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். முன்னதாக சுஷ்மிதா தனது மூத்த மகளிடம் அவரின் பிறப்பு குறித்த உண்மையை தெரிவிக்க முடிவு செய்யதார்.
விளையாடிக் கொண்டிருக்கும்போது அப்படியே ரினீ தத்தெடுக்கப்பட்டதையும் தெரிவித்தார் சுஷ்மிதா. இதை கேட்ட ரினீயோ என்னை தத்தெடுத்தீர்களா, நான் உங்கள் மகள் இல்லையா என்று கேட்டாராம். சொந்த மகள் போரிங், நீ அன்பால் பிறந்தவள், ஸ்பெஷலானவள் என்று தெரிவித்துள்ளார் சுஷ்மிதா.
இது குறித்து சுஷ்மிதா கூறியதாவது,
என் மகள்களுக்கு 18 வயதான பிறகு அவர்களின் உண்மையான பெற்றோர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். ரினீக்கு 16 வயது இருக்கும்போது நீதிமன்றத்திற்கு சென்று அவரின் பெற்றோர் யார் என்பதை தெரிந்து கொள் என்று கூறினேன். நிஜ பெற்றோர் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளும் உரிமை ரினீக்கு உண்டு.
திடீர் என்று என் நிஜ பெற்றோரை பற்றி தெரிந்து கொள்ளுமாறு ஏன் கூறுகிறீர்கள் என்று ரினீ கேட்டார். நிஜ பெற்றோரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை ஆனால் தெரிந்து கொள்ளும் உரிமை உள்ளது என்கிறேன் என்று ரினீயிடம் கூறினேன். அதற்கு அவரோ, இல்லம்மா, நான் எதையும் தெரிந்துகொள்ள விரும்பவில்லை என்றார்.
என் இரண்டாவது மகள் அலிஷாவை தத்தெடுத்த பிறகு நான் படங்களில் நடிப்பதை நிறுத்தியது ஏன் என்று கேட்கிறார்கள். நான் ஒரு குழந்தையை ஸ்பான்ஸர் செய்யவில்லை மாறாக தாயாக மாறியுள்ளேன். என் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். அதனால் மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்து கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என சுஷ்மிதா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











