ஸ்ரீதேவி மகளுக்கு கிடைக்க வேண்டிய பட வாய்ப்பு வாரிசு நடிகைக்கு எப்படி கிடைத்தது?

By Siva

Recommended Video

படவாய்ப்பை இழந்த ஸ்ரீதேவியின் மகள். திடுக்கிடும் தகவல்!

மும்பை: ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்விக்கு கிடைக்க வேண்டிய பட வாய்ப்பு எப்படி நடிகர் சயிப் அலி கானின் மகளுக்கு கிடைத்தது என்பது தெரிய வந்துள்ளது.

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் படம் சிம்பா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா நடிக்கிறார்.

படத்தை கரண் ஜோஹார் தயாரிக்கிறார்.

சாரா

சாரா

சிம்பா படத்தில் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூரை நடிக்க வைக்க திட்டமிட்டு அவரிடம் ஸ்கிரிப்ட் அளித்தனர். இறுதியில் சாரா அலி கான் தேர்வு செய்யப்பட்டார்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

சாரா அலி கானின் முதல் படமான கேதர்நாத் படப்பிடிப்பு பாதியில் நின்ற நிலையில் அவருக்கு சிம்பா வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு கிடைக்க அவரின் தந்தை சயிப் உதவி செய்துள்ளார்

சயிப் அலி கான்

சயிப் அலி கான்

என் மகளின் கெரியரை கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவருக்கு கரண் ஜோஹாரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க உதவி செய்தேன். என் மகளுக்கு நான் இருக்கிறேன் என்று சயிப் அலி கான் தெரிவித்துள்ளார்.

ரோஹித் ஷெட்டி

ரோஹித் ஷெட்டி

என் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக சாரா அலி கான் என்னிடம் தெரிவித்தார். அவர் சிம்பா படத்திற்கு சரியாக இருப்பார் என்று தோன்றியது. ரன்வீர் சிங்கிற்கு ஏற்ற ஜோடி அவர் தான் என்று அவரை ஒப்பந்தம் செய்தோம் என இயக்குனர் ரோஹித் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

ஸ்கிரிப்ட்

ஸ்கிரிப்ட்

கரண் ஜோஹார் சிம்பா ஸ்கிரிப்ட்டை தனக்கு நெருக்கமான ஜான்வி மற்றும் சாராவிடம் அளித்துள்ளாார். ஜான்வியோ நான் எப்படி அவ்வளவு பெரிய ஹீரோவான ரன்வீருடன் நடிப்பேன் என்று ஊரெல்லாம் புலம்ப அந்த வாய்ப்பு சாராவுக்கு சென்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்வியின் புலம்பல், சயிப் அலி கானின் பரிந்துரையால் சாராவுக்கு சிம்பா வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி தனது மகள் ஜான்வியை கரண் ஜோஹார் தான் பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று விரும்பினார். அவர் விருப்பப்படியே கரண் தயாரித்துள்ள தடக் படம் மூலம் ஜான்வி பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X