அம்மாவுக்கு தாயாக மாறிய மகன்! நடிகையின் உருக்கமான போஸ்ட்!
மும்பை: நடிகை சோனாலி பெந்த்ரேவின் மகன் ஒரு குழந்தை போல் அவரை பார்த்துக்கொள்வதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்
பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று, பிறகு தமிழ்ப்படங்களிலும் நடித்தவர் நடிகை சோனாலி பெந்த்ரே.
பம்பாய் திரைப்படத்தில் வரும் ஹம்மா ஹம்மா பாடலை ரகுமானுக்காக பாடியவர்களை விட சோனாலி பெந்த்ரேவுக்காக பாடியவர்கள் அதிகம். ஒரே பாடலில் இடம்பெற்றிருந்தாலும், அவரின் மேக்னட் லுக் மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.

கதிர் இயக்கிய காதலர் தினம் திரைப்படத்தில் ராஜா மட்டும் காதலிக்கவில்லை அந்த ரோஜாவை. அன்று வாலிப வயதில் இருந்த இளைஞர்கள் அனைவருமே ரோஜா ரோஜா என ஏங்கத் துவங்கினர்.
என்னவிலை அழகே என குணால் பாடும்போது சோனாலி பெந்த்ரேவை மனதில் வைத்தே வாலி எழுதியிருக்கிறார் என்பது தெரியும். நாசரின் மகள், குணாலின் காதலி என அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடித்திருப்பார் சோனாலி.
காதலர் தினம் திரைப்படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கிய கண்ணோடு காண்பதெல்லாம் திரைப்படத்தில் நடித்தார். யார் கண் பட்டதோ அதற்குப் பிறகு தமிழ்நாட்டுப் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.
43 வயதாகும் சோனாலி பெந்த்ரே இப்போது புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். தான் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதை தன்னுடைய மகன் ரன்வீரிடம் கனத்த இதயத்தோடு தெரிவித்ததாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
12 வயது ஆகும் மகனிடம் தனக்கு கேன்சர் என்று சொல்லும்போது மிக சாதுர்யமாக சோனாலியை கையாண்டதாகவும், இப்போது ரன்வீர் தான் தன்னை ஒரு குழந்தை போல பார்த்துக் கொள்கிறான் என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் குணமாக பிரார்த்திப்பதாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











