வெங்கட்பிரபுவுக்கு எப்படிப்பா சூர்யா கால்ஷீட் கிடைத்தது?
சென்னை: வெங்கட் பிரபு சூர்யாவை வைத்து ஒரு படத்தை எடுக்கிறார். அவருக்கு சூர்யாவின் கால்ஷீட் எப்படி கிடைத்தது என்று தெரியுமா?
வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி அமரன் நடித்துள்ள பிரியாணி படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
பிரியாணி படம் ரம்ஜானுக்கே வர வேண்டியது. ஆனால் சில காரணங்களால் படம் ரிலீஸ் தள்ளிப் போய் வரும் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சூர்யா எப்படி?
பிரியாணி படமே இன்னும் ரிலீஸாகவில்லை அதற்குள் வெங்கட் பிரபு எப்படி சூர்யாவின் கால்ஷீட்டை பெற்றார் என்று கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

பிரியாணி
வெங்கட் பிரியாணி படத்தை சூர்யாவுக்காக ஸ்பெஷலாக திரையிட்டாராம். படத்தை பார்த்த சூர்யா ஆஹா பிரியாணி ருசியாக இருக்கிறது. இதையல்லவா நீங்கள் அழகுராஜாவுக்கு முன்பு ரிலீஸ் செய்திருக்க வேண்டும் என்று கூறினாராம்.

எனக்கு ஒன்னு
பிரியாணி படத்தை பார்த்து இம்பிரஸ் ஆன சூர்யா தனக்கும் ஒரு கதையை தயார் செய்யுமாறு வெங்கட் பிரபுவிடம் தெரிவித்தாராம். சூர்யா கேட்ட மாத்திரத்தில் வெங்கட் ஒரு வரியில் கதை சொல்லியிருக்கிறார்.

கால்ஷீட்
ஒரு வரிக் கதை சூர்யாவுக்கு பிடித்துப் போய்விட்டதாம். உடனே உங்கள் படத்தில் நான் நடிக்கிறேன் என்று உறுதி அளித்துவிட்டாராம் சூர்யா. இதையடுத்து முழு திரைக்கதையை எழுதி முடிக்கும் வேலையில் இறங்கிவிட்டாராம் வெங்கட்.


Click it and Unblock the Notifications











