twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    EMI-யில் அம்மா பெயரில் வாங்கப்பட்ட கார்.. விபத்தின் போது எவ்வளவு ஸ்பீடில் காரை ஓட்டி வந்தார் யாஷிகா?

    |

    சென்னை: விபத்தின் போது யாஷிகா ஆனந்த் எவ்வளவு ஸ்பீடில் காரை ஓட்டிச் சென்றார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    Recommended Video

    Yashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update

    பிரபல நடிகையான யாஷிகா ஆனந்த் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தார்.

    தமிழக ஒலிம்பிக் வீரர்களுக்காக சிறப்பு பாடல் வெளியிட்ட யுவன் ஷங்கர் ராஜா தமிழக ஒலிம்பிக் வீரர்களுக்காக சிறப்பு பாடல் வெளியிட்ட யுவன் ஷங்கர் ராஜா

    அப்போது ஈசிஆரில் மகாபலிபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடத்தில் அவரது கார் விபத்துக்குள்ளானது. சென்டர் மீடியனில் மோதி கார் கவிழ்ந்தது.

    யாஷிகா பலத்த காயம்

    யாஷிகா பலத்த காயம்

    இதில் யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி பவனி காரிலிருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த யாஷிகா பலத்த காயமடைந்தார்.

    யாஷிகாவுக்கு ஆபரேஷன்

    யாஷிகாவுக்கு ஆபரேஷன்

    அவரது நண்பர்கள் சையது மற்றும் அமீர் லேசான காயங்களுடன் தப்பினர். இடுப்பு, கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட யாஷிகாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    தீவிர சிகிச்சை பிரிவில்

    தீவிர சிகிச்சை பிரிவில்

    யாஷிகா ஆனந்த் இன்னமும் தீவிர சிகிச்சை பிரிவில்தான் உள்ளார். இந்நிலையில் விபத்துக்குள்ளான யாஷிகா ஆனந்த்தின் கார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. யாஷிகா பயன்படுத்தி வந்த காரின் பெயர் ஹாரியர் XZA ப்ளஸ், இந்த கார் டீசல் கார் ஆகும்.

    தவணை முறையில் கார்

    தவணை முறையில் கார்

    இந்த கார் யாஷிகா ஆனந்த், அம்மா சோனல் ஆனந்த் அவர்களின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. சுமார் 25 லட்சம் மதிப்புள்ள இந்தக் காரை யாஷிகா குடும்பத்தினர் தவணை முறையில் வாங்கியுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் இந்த கார் வாங்கப்பட்டுள்ளது.

    6 ஏர் பேக்குகள்

    6 ஏர் பேக்குகள்

    இந்த காரில் நார்மல் மோட், ஈக்கோ மோட், ஸ்போர்ட்ஸ் மோட் ஆகிய மூன்று வகையான டிரைவிங் ஆப்ஷன்களில் உள்தாக தெரிகிறது. இதனால் அதற்கு ஏற்றது போல் வேகத்தை கூட்டவும் குறைக்கவும் முடியும். மேலும் இந்த காரில் 6 ஏர்பேக்குகள் உள்ளன.

    கோர விபத்துக்கு காரணம்

    கோர விபத்துக்கு காரணம்

    6 ஏர் பேக்குகள் இருந்தபோதும், சீட் பெல்ட் அணியாததால் யாஷிகாவின் தோழி காரிலிருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிவேகமாக காரை ஓட்டியதே இந்த கோர விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

    129 கிலோ மீட்டர் ஸ்பீடு

    129 கிலோ மீட்டர் ஸ்பீடு

    விபத்தின் போது யாஷிகா ஆனந்த் 129 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கியுள்ளார். 129 கிலோ மீட்டர் வேகத்தில் யாஷிகா ஆனந்த் காரை ஓட்டி வந்தது, சாலை நடுவே வைக்கப்பட்டுள்ள சிசிடிவியிலும், வாகன வேகக் கண்காணிப்பு கருவிகளில் தெரியவந்துள்ளது.

    உயிர்சேதம் ஏற்படுத்தியது

    உயிர்சேதம் ஏற்படுத்தியது

    இதனிடையே யாஷிகா மீது உயிர்சேதம் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது ஓட்டுநர் உரிமமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    It has been reported that how fast Yashika Anand was driving the car during the accident. Yashika Anand met with an accident on Sunday night in ECR.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X