twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹாரிஸ் ஜெயராஜிற்கு 50 லட்சம் ஈட்டித் தந்த நானே வருவேன்... எப்படி தெரியுமா?

    |

    சென்னை: தயாரிப்பாளர், விநியோகஸ்தர், எழுத்தாளர், நடிகர் என்ற பன்முகங்கள் கொண்டவர்தான் தனஞ்செயன்.

    நடிகர் அஜித் குமார் பற்றியும் பொன்னியின் செல்வன் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் பற்றியும் அவர் பேட்டியளித்துள்ளார்.

    அதில் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் நானே ஒருவன் திரைப்படத்தை பற்றிய சுவாரசியமான தகவல்களையும் கூறியிருக்கிறார்.

    பிரிந்த பின்பும் ரச்சித்தாவை மறக்காத கணவர்..என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?பிரிந்த பின்பும் ரச்சித்தாவை மறக்காத கணவர்..என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?

    படத்திற்கு தலைப்பே வேண்டாம்

    படத்திற்கு தலைப்பே வேண்டாம்

    நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் தலைப்பு பலரால் விமர்சிக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு, நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். படத்தின் தலைப்பை வைத்து பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ஓடுவதில்லை. உதாரணத்திற்கு ஏகே 61 பிராஜெக்ட் 61 என்ற தலைப்பில் படம் வெளிவந்தாலும் அது கண்டிப்பாக ஓடும். படங்கள் நடிகர்களுக்காகத்தான் ஓடுகிறதே தவிர தலைப்புகளுக்காக அல்ல. இது அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் பொருந்தும்.

    விமர்சகர்களால் தாக்கமில்லை

    விமர்சகர்களால் தாக்கமில்லை

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஒரு விமர்சகர் படு மோசமாக விமர்சித்துள்ளார். கிட்டத்தட்ட 15 லட்சம் நபர்கள் அந்த விமர்சனத்தை பார்த்துள்ளார்கள். ஆனால் அந்த மக்கள்தான் படத்தை திரையரங்கில் பார்த்து இப்போது வெற்றிகரமாக ஓடச் செய்கிறார்கள். அந்த விமர்சகர் கூறிய நெகட்டிவ் விமர்சனத்தால் படத்தினுடைய வருமானத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. விமர்சனங்களை சுக்கு நூறாக்கி பொன்னியின் செல்வன் 300 கோடிகள் வசூலையும் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    ராஜராஜன் இந்து சர்ச்சை

    ராஜராஜன் இந்து சர்ச்சை

    ராஜராஜன் இந்துவா என்ற என்ற சர்ச்சை பரவலாக பேசப்படுகிறது. அதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு, அந்தக் காலகட்டத்தில் சைவம் வைணவம் என்று இருந்தார்கள். ஆனால் இப்போது அவையனைத்தும் இந்து என்றுதான் சொல்லப்படுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கூட ஹரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு என்கிற வசனம் வரும். இந்தச் சர்ச்சையை பொருத்தவரை என்னுடைய கருத்தும் அதேதான் என்று கூறியிருக்கிறார்.

    ஹாரிஸ் ஜெயராஜிற்கு 50 லட்சம்

    ஹாரிஸ் ஜெயராஜிற்கு 50 லட்சம்

    நானே வருவேன் திரைப்படம் தோல்வி படம் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் பார்த்தீர்கள் என்றால் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிற்கு தஞ்சாவூரில் இரண்டு திரையரங்குகள் உள்ளது. இரண்டிலும் நானே வருவேன் படம்தான் ஓடுகிறது. அந்தத் திரையரங்குகள் மூலம் தனக்கு 50 லட்சம் வருவாய் கிடைக்கப் போகிறது என்று ஹாரிஸ் ஜெயராஜ் கூறியிருக்கிறார். தஞ்சாவூரில் இருக்கும் இரண்டு திரையரங்கில் மட்டுமே அவருக்கு இவ்வளவு லாபம் கிடைக்கும்பொழுது ஒட்டுமொத்தமாக யோசித்துப் பாருங்கள். நானே வருவேன் படமும் வெற்றிப் படம்தான் என்று தனஞ்செயன் கூறி இருக்கிறார்.

    English summary
    Dhananjeyan is a multifaceted producer, distributor, writer and actor. In a Recent Interview, he have talked about Actor Ajith Kumar, Ponniyin Selvan and Naane Varuvean Movies. In the same interview, Harris has also told interesting information about the Harris Jayaraj and Nane Varuvean Movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X