இதைப்பார்த்துதான் செல்வராகவன் மீது காதல் கொண்டேன்.. கீதாஞ்சலி சொன்ன ரகசியம்!
சென்னை: செல்வராகவன் மீது காதல் வர காரணம் என்ன என்பது குறித்து அவரது மனைவி கீதாஞ்சலி மனம் திறந்துள்ளார்.
தமிழில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக என்ட்ரி கொடுத்தவர் செல்வராகவன். முதல் படத்திலேயே தனது தம்பியான தனுஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.
இந்தப் படம் இருவருக்குமே நல்ல தொடக்கத்தை கொடுக்க, அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்த இருவரும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர்.

திருமணம் விவாகரத்து
இந்நிலையில் காதல் கொண்டேன் உட்பட சில படங்களில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய சோனியா அகர்வாலை கடந்த 2006 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்தார் செல்வராகவன். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

இரண்டாவது திருமணம்
இதனை தொடர்ந்து தன்னுடன் அசிஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவருடன் செல்வராகவனுக்கு காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

மூன்றாவதாக மகன்
இவர்களுக்கு ஏற்கனவே லீலாவதி என்ற மகளும் ஓம்கார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கீதாஞ்சலி மூன்றாவது முறையாக கர்ப்பமானார். கடந்த ஜனவரி மாதம் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ரிஷிகேஷ் என பெயர் வைத்துள்ளனர்.

அந்தக் கதைதான் காரணம்
இந்நிலையில் தான் செல்வராகவன் மீது காதல் கொண்டது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு செல்வராகவன் எழுதிய கானல் நீர் என்ற கதையை படித்துதான் செல்வராகவன் மீது காதல் கொண்டதாக கூறியுள்ளார்.
Recommended Video

இரண்டாம் உலகம்
மேலும் கானல் நீர் கதைதான் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளியான இரண்டாம் உலகம் என்றும் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் வெளியானது. அடுத்ததாக தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











