twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கல்லறையில் முதன்முதலாக கமலை சந்தித்து பேசிய கிரேஸி மோகன்

    By Siva
    |

    சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸனை முதன்முதலாக தாங்கள் சந்தித்தது பற்றி நடிகர், வசனகர்த்தா கிரேஸி மோகன், நடிகர் ரமேஷ் அரவிந்த் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

    உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு இன்று வயது 60. இந்த நாளில் திரை உலகில் அவரது நண்பர்கள் நடிகரும், வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன், நடிகரும், இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் ஆகியோரும் நடிகை ஆண்ட்ரியாவும் கமலை முதன்முதலாக சந்தித்தது பற்றி தெரிவித்துள்ளனர்.

    அதன் விவரம் வருமாறு,

    ரமேஷ் அரவிந்த்

    ரமேஷ் அரவிந்த்

    பெங்களூரில் சகர சங்கமம் பட(சலங்கை ஒலி) வெற்றி விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது தான் நான் கமல் ஹாஸனை முதன்முதலாக பார்த்தேன். கமல் நடித்த சொல்லத்தான் நினைக்கிறேன் கன்னட ரீமேக்கில் நான் நடித்தபோது தான் கே. பாலசந்தர் என்னை புன்னகை மன்னன் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் சென்று கமலை அறிமுகப்படுத்தி வைத்தார். கன்னட படத்துல பிச்சு உதற்றான்பா இவன் என்று அவர் கமலிடம் கூறிவிட்டு சென்றார். மாமாவுக்கு கொடுமா பாடலுக்காக கமல் சார்லி சாப்ளின் வேடத்தில் இருந்தார். அப்போது தான் நாங்கள் முதலில் பேசிக் கொண்டோம் என்றார் ரமேஷ் அரவிந்த்.

    கிரேஸி மோகன்

    கிரேஸி மோகன்

    நான் கல்லூரியில் படிக்கையில் நாடக குழுவில் இருந்தபோது என்னுடைய கிரேட் பேங்க் ராபரி நாடகத்திற்காக சிறந்த இயக்குனர் மற்றும் எழுத்தாளர் விருது கிடைத்தது. அதை நான் கமலிடம் இருந்து தான் பெற்றேன். அப்போது அவர் பெரிய ஸ்டார், நான் வெறும் மாணவன். அதன் பிறகு 1986-87ல் ஒரு நாள் மாலை நான் திருவனந்தபுரம் கிளம்பிக் கொண்டிருக்கையில் என் வீட்டுக்கு பின்னால் ஏதோ சத்தம் கேட்டது. என்னவென்று பார்த்தால் கல்லறையில் படப்பிடிப்பு நடத்தினார்கள். அப்போது ஒரு குரல் என்னை அழைத்ததும் நான் சென்றேன். அது கமலின் குரல். அவர் என்னை அழைத்து ஒரு படத்திற்கு வசனம் எழுத முடியுமா என்று கேட்டார். அப்படி தான் அபூர்வ சகோதரர்கள் உருவானது என்றார் கிரேஸி மோகன்.

    ஆண்ட்ரியா

    ஆண்ட்ரியா

    நான் ஒரு பாடகியாகவே கமல் சாரை முதன்முதலாக சந்தித்தேன். அவரது மன்மதன் அம்பு படத்திற்காக நான் ஹூ இஸ் தி ஹீரோ பாடலை பாடினேன். மலேசியா, சிங்கப்பூரில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன். அதன் பிறகு அவருடன் 3 படம் பண்ணுவேன் என்று நினைக்கவே இல்லை. ஒரு நடிகையாக அவரை விஸ்வரூபம் செட்டில் தான் முதலில் பார்த்தேன். என்னை ஒப்பந்தம் செய்யும் முன்பு பார்க்க வேண்டும் என்று அவர் விரும்பினார். என் மீது நம்பிக்கை உள்ளதா என்று அவர் கேட்டதற்கு ஆமாம் என்றேன். அதன் பிறகு நான் ஒப்பந்தமாகிவிட்டேன். ஒவ்வொரு படத்திலும் அவர் மீது உள்ள மரியாதை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்திய சினிமாவை அலங்கரிப்பவர்களில் அவரும் ஒருவர் என்றார் நடிகை ஆண்ட்ரியா.

    ஷங்கர்

    ஷங்கர்

    நான் பிரபல ஆங்கில பத்திரிக்கையில் வேலை பார்த்தபோது அப்போது விருமாண்டியில் நடித்துக் கொண்டிருந்த கமலை முதல்முறையாக சந்தித்து பேசினேன். அதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து நான் ஒன்இந்தியா சினிமா ஆசிரியராக சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். 10 ஆண்டுகள் கழித்து என்னை பார்த்த கமல் அடையாளம் கண்டுகொண்டு பேசினார். அது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஒரு பெரிய ஸ்டார் அதுவும் இத்தனை ஆண்டுகள் கழித்து என்னை அடையாளம் கண்டுகொண்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கை நிருபர் ஒருவர் கமலை பார்த்து, ரஜினிக்கும், உங்களுக்கும் வயதாகிவிட்டதே நீங்கள் எல்லாம் ஏன் இன்னும் ஓய்வு பெறவில்லை என்று கேட்டார். அதற்கு கமல் சிறிதும் கோபப்படாமல் சிரித்துக் கொண்டே, என்னைவிட உங்களுக்கு வயதாகிவிட்டதே நீங்கள் தான் முதலில் ஓய்வு பெற வேண்டும், கலைஞனுக்கு வயது வரம்பு இல்லை என்று நிதானமாக பதில் அளித்தார் என்றார் நம் சினிமா ஆசிரியர் ஷங்கர்.

    English summary
    Actors Crazy Mohan, Ramesh Aravind, actress Andrea recalled their first meeting with Kamal Haasan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X