பதவிமேல் ஆசை இல்லை.. ஜேசன் சஞ்சயின் மெர்சல் ஆட்டம்.. சிக்மா ஸ்டைல் பாடல் எப்படி இருக்கு?

சென்னை: லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' (Sigma) திரைப்படம் வரும் ஜூலை 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் பாடலான சிக்மா ஸ்டைல் பாடல் தற்போது வெளியானது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியுள்ள தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார். சிக்மா ஸ்டைல் பாடலில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லாவுடன் இணைந்து ஜேசன் சஞ்சயும் நடனமாடிய வீடியோ விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

How is Jason Sanjay s Sigma Style song from Sigma Movie Check Here
Photo Credit:

விஜய் மற்றும் சங்கீதா இடையே குடும்ப பிரச்னைகள் இருந்தாலும், விஜய் மகனான ஜேசன் சஞ்சய்யை விஜய் ரசிகர்கள் தொடர்ந்து இளைய தளபதி என்றே கொண்டாடி வருகின்றனர். சிக்மா ஸ்டைல் பாடலாக எப்படி இருக்கிறது என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

சிக்மா ஸ்டைல் பாடல் ரிலீஸ்: தமன் இசையில் உருவாகியுள்ள சிக்மா ஸ்டைல் பாடலை தமன், ஸ்மைல் துப்பாக்கிஸ், எம்சி ரூட் இணைந்து பாடியுள்ளனர். இளைஞர்களை கவரும் விதத்தில் செம ஸ்டைலான லிரிக் வீடியோ மேக்கிங்கை ஜேசன் சஞ்சய் உருவாக்கி பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். பாப் ஸ்டைல் பாடலாக இந்த பாடல் உருவாகியுள்ளது. பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

பதவிமேல் ஆசை இல்லை: தியேட்டர் தெறிக்கும் மச்சி என்கிற வார்த்தையை பார்த்த உடனே இளைய தளபதி என விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் பதவி மேல ஆசை இல்லை என்கிற வரியும் பாடலில் இடம்பெற்றுள்ளது. மேலும், தனி வழி, அந்த ஆண்டவன் என் பக்கம், குனியாது தல நெவர் எவனுக்கும் போன்ற வரிகள் இடம்பெற்றிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. படத்தின் டைட்டிலையே சிக்மா என வைத்து தனது கெத்தை ஜேசன் சஞ்சய் காட்டியுள்ளார். கண்டிப்பாக பாடல் முதல் முறை கேட்டவுடனே பிடிக்கும் ரகம் இல்லை தான். ஆனால், கேட்க கேட்க பிடிக்கும். இளைஞர்களை கவர்ந்து விட்டால் ஹிட்டடிக்கும். விஷுவல் ட்ரீட்டாக பாடல் சிறப்பாக உள்ளது. ஃபரியா அப்துல்லாவின் கடைசி நடன போர்ஷன், அந்த பிரம்மாண்ட சிலையாக ஹீரோ சந்தீப் கிஷன் அமர்ந்திருப்பது, J கார்டு ஜேசன் சஞ்சய்யை குறிப்பது என அசத்துகிறது. அடுத்தடுத்த பாடல்கள், படத்தின் டிரைலர் மற்றும் படம் எப்படி இருக்கு என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X