For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிகரெட் புகை.. ஆபாச காட்சிகள்.. கெட்ட வார்த்தைகள்.. கொஞ்சம் காமெடி.. எப்படி இருக்கு லைவ் டெலிகாஸ்ட்?

  |

  சென்னை: ஹீரோயினை போல்டான பெண்ணா காட்டணும்னா சிகரெட் பிடிக்க வைத்தால் போதும் என்பதில் தொடங்கும் அபத்தம், லைவ் டெலிகாஸ்ட் முழுவதும் பல்வேறு விதமாக கொட்டிக் கிடக்கிறது.

  இயக்குநர் வெங்கட் பிரபுவின் 2005ம் ஆண்டு டைரியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த லைவ் டெலிகாஸ்ட் கதை தற்போது வெப்சீரிஸாக உருவெடுத்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.

  அதிரடியாக தயாராகும் தூம் 4... வில்லனுக்கு பதில் வில்லியா...அதுவும் இவரா? அதிரடியாக தயாராகும் தூம் 4... வில்லனுக்கு பதில் வில்லியா...அதுவும் இவரா?

  சிகரெட் புகை, ஆபாச காட்சிகள், ஆங்கில கெட்ட வார்த்தை, கொஞ்சம் காமெடி, கொஞ்சம் பேய், கடைசியில் பெயருக்கு ஒரு சென்டிமென்ட் வைத்து கிண்டப்பட்டுள்ளது.

  ஒரே சிகரெட் புகை

  ஒரே சிகரெட் புகை

  போல்டான பெண் இயக்குநர் என காட்ட வேண்டும் என்றால், ஹீரோயின் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைத்தாலே போதும் என நினைத்து விட்டார் போல, சரி ஒன்று இரண்டு காட்சிகள் இருந்தால் போதாதா? காஜலை காட்டினாலே வாயில் சிகரெட் உடன் தான் காட்ட வேண்டும் என்பது போல சிகரெட்டை அவரது ஆறாம் விரலாக மாற்றியது அபத்தம்.

   நிர்வாண குளியல்

  நிர்வாண குளியல்

  காட்டுக்குள் காரில் சென்று கசமுசா செய்யும் போது பேய் துரத்தியது என முதல் காட்சியும், தனியாக இருக்கும் இளம் பெண்ணை துரத்தும் பேய் என இரண்டாவது கதையும் கில்மா காட்சிகளாகவே நகர்ந்தன. டி.ஆர்.பிக்காக காஜல் எடுத்த இரண்டாவது வீடியோவில் இளம்பெண்ணை நிர்வாணமாக குளிக்க வைத்தும், படுக்கையறையில் ஆடைகளை அவிழ்த்தும் நாங்களும் வெப்சீரிஸ் எடுக்கிறோம் என காட்டிவிட்டார்.

  ஆங்கில கெட்ட வார்த்தை

  ஆங்கில கெட்ட வார்த்தை

  ஹாலிவுட் படங்களில் வார்த்தைக்கு வார்த்தை வசனம் கிடைக்காமல் வைக்கப்படும் அதே 'F' ல் ஆரம்பிக்கும் அந்த கெட்ட வார்த்தையையும் அடிக்கடி காஜல் அகர்வால் பேசுகிறார். மேலும், ரூம் போட அலையும் நம் டிவியின் மேலதிகாரியாக நடித்துள்ள வைபவ்வின் அண்ணனை பார்த்து நடு விரலை காட்டியும் ஜெனிஃபர் கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார் காஜல் அகர்வால்.

  கொஞ்சம் காமெடி

  கொஞ்சம் காமெடி

  லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸில் வைபவ், பிக் பாஸ் டேனியல் மற்றும் நடிகராக வேண்டும் என வந்து பேய் வேடம் போட்டு நடிக்கும் அந்த நபர் மட்டுமே ஆறுதல். முதல் முறையாக பேயாக வேடம் போட்டு அவர் பாஸ் பண்ணாமல் செய்யும் சேட்டைகள் மட்டுமே சிரிக்க வைத்தது. இது நல்லா இருக்கே, இதே காமெடியை பல டேக்குகளுக்கு ஓட்டுவோம் என ஒட்டியதால் அந்த காமெடியும் கடுப்பாகி விட்டது.

  சீரியலை விட மோசமா

  சீரியலை விட மோசமா

  இந்த லைவ் டெலிகாஸ்ட்டை 7 எபிசோடுகளுக்குள் முடித்ததே பெரிய சந்தோஷமான விசயம். பேய் கதையை வைத்து ஷார்ட் பிலிம் எடுக்கிறவங்களே நல்லா பண்ணிட்டு வர நேரத்தில் வெங்கட் பிரபு இப்படி பண்ணது ரொம்பவே பேரதிர்ச்சியாத்தான் இருக்கு. சில இடங்களில் சீரியலை விட மோசமா பிக்சர் குவாலிட்டி இருக்கு.

  பந்து விளையாடுற பேய்

  பந்து விளையாடுற பேய்

  சிறுவனுடன் பந்து விளையாடிக் கொண்டிருக்கும் அந்த பேயை தேவையில்லாமல் சீண்டிவிட்டு இரண்டு கொலையை பண்ண வச்சிட்டீங்களே என்றும் கேட்கத் தூண்டுகிறது. பேயாக வேடமிட்ட பெண் எனக்கு நீங்க பேய் லென்ஸ் வச்சது போலவே, இங்க அவரு பேயாக மாறினார் என சொல்லும் இடத்தில் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

  பிளஸ் இல்லையா

  பிளஸ் இல்லையா

  லைவ் டெலிகாஸ்ட் என்கிற கான்செப்ட் நல்லாவே இருந்தது. 7 எபிசோடுகளில் சில இடங்கள் வொர்க்கவுட் ஆகின. கடைசியில் அவசர அவசரமாக சொல்லப்பட்ட அந்த அஸ்வின் காக்கமனு போர்ஷனும் அவரது நடிப்பும் நல்லாவே இருந்தது. குக் வித் கோமாளி அஷ்வின் நடிப்பு சூப்பர். பிரபலமான நடிகர்கள் நடித்திருப்பதால் ஒரு முறை பார்க்கலாம்.

  English summary
  Kajal Aggarwal’s debut webseries Live Telecast is mixed with little bit of comedy and horror and other all clichés.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X