கங்குவா ஞாயிற்றுக்கிழமை புக்கிங் எப்படி இருக்கு?.. சவுண்டை குறைத்த பின்னராவது பச்சை நிறம் மாறியதா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தர்பார் படம் படுதோல்வியடைந்த நிலையில், நம்பி சிறுத்தை சிவாவிடம் அண்ணாத்த படத்தை இயக்கும் பொறுப்பை ரஜினிகாந்த் கொடுத்தார். ஆனால், அந்த படத்தையும் சிவா காலி செய்து விட்டார். அதன் பின்னர், கங்குவா படத்தை பல கோடி பட்ஜெட்டில் எடுக்க சூர்யா எப்படி முன் வந்தார் என்றே தெரியவில்லை என ஏகப்பட்ட ரசிகர்களே புலம்பி வருகின்றனர்.

பெரிய பட்ஜெட் படங்களை இயக்க ஷங்கரே திணறி வரும் நிலையில், சிறுத்தை சிவாவை நம்பி சூர்யா அகலக்கால் வைத்திருக்கக் கூடாது என்றும் திறமையான இயக்குநர்களை நம்பி இறங்கியிருந்தால் படம் வொர்த்தாக வந்திருக்கும் என்றும் சூர்யாவின் அத்தனை வருட உழைப்பும் வீணாகி விட்டது என பலரும் புலம்பி வருகின்றனர்.

kanguva suriya ticket booking

ரசிகர்களின் கடுமையான விமர்சனத்திற்கு பிறகு 2 புள்ளி சத்தத்தை தியேட்டர்களில் குறைக்க உத்தரவிட்டு இருப்பதாக ஞானவேல்ராஜா கூறியுள்ளார். இந்நிலையில், சனிக்கிழமையான இன்றே ஆரஞ்சு நிறத்தில் பல முக்கிய தியேட்டர்களில் படம் 60 சதவீதம் ரசிகர்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைக்கான டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம் வாங்க..

காணாமல் போன கங்குவா ட்ரோல்: கங்குவா படம் பற்றிய சர்ச்சை கருத்துக்களும் கலாய் ட்ரோல்களும் நயன்தாரா தனுஷுக்கு எதிராக கிளப்பிய ஒற்றை சர்ச்சையால் காணாமல் போய்விட்டது. சூர்யா ரசிகர்கள் நிம்மதியாக கங்குவா படத்தை புக் செய்து பார்த்து வருகின்றனர். சுமார் ஒருவாரம் வைத்து வறுத்தெடுக்கப்போறாங்க என பயந்த நிலையில், அந்த பஞ்சாயத்து அடுத்த பஞ்சாயத்து வந்ததும் வழக்கம் போல காணாமல் போய்விட்டது.

குறைக்கப்பட்ட சத்தம்: முதல் நாளில் இருந்தளவு தலைவலி குறித்து 2வது நாளில் ரசிகர்கள் பெரிதும் புகார் அளிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணமே படத்தின் சத்தத்தை தியேட்டர் ஓனர்கள் குறைக்க படக்குழுவினர் வலியுறுத்திய நிலையில், தியேட்டருக்கு ரசிகர்கள் வரவேண்டும் என்பதற்காக நல்லாவே குறைத்து விட்டார்களாம். படத்தில் வசனம் குறைவாகவே வருவதால், எந்த பிரச்சனையும் இல்லை என்கின்றனர்.

சன்டே டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கு?: கங்குவா திரைப்படம் வியாழக்கிழமை வெளியான நிலையில், முதல் நாளில் உலகம் முழுவதும் 58 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால், 2வது நாள் வசூல் கணக்கை எல்லாம் வெளியிட மாட்டார்கள் என்றே கூறுகின்றனர். டிக்கெட் புக்கிங்கும் அதிரடியாக குறைந்து விட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நாளை பல திரையரங்குகள் இன்னமும் புக்கிங் ஆகாமல் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. சில திரையரங்குகள் ஆரஞ்சு வண்ணத்தில் காட்சியளிக்கின்றன. முதல் வார முடிவில் ஒட்டுமொத்தமாக கங்குவா 100 கோடி வசூலை உலகளவில் அள்ளினாலே பெரிய விஷயம் என்கின்றனர். அதன் பின்னர் இந்த படம் பெரிதாக வசூல் ஈட்டுவது கஷ்டம் தான் என்றும் கூறுகின்றனர்.

kanguva suriya ticket booking

பெரிய இடி: 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு தியேட்டர் வசூல் 100 கோடி கூட வரவில்லை என்றால் கங்குவா படத்துக்கு பெரிய இடி விழுவது உறுதி என்கின்றனர். சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை ஓடிடியில் 8 வாரத்துக்கு பிறகே வெளியிடுவார்கள் என்பதால் வரும் பொங்கலுக்கு அமேசான் பிரைம் ஓடிடியில் கங்குவா வெளியாகும் என தெரிகிறது. அப்போதாவது தங்கலான் ஓடிடியில் வெளியாகுமா? என ஸ்டூடியோ க்ரீனை பார்த்து சியான் விக்ரம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X