For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தரமான படம்.. எமோஷனல்.. த்ரில்லிங்.. ட்விஸ்ட் எல்லாமே இருக்கு.. பொன்மகள் வந்தாள் டிவிட்டர் ரிவ்யூஸ்!

  |

  சென்னை: அமேஸான் பிரைமில் வெளியான பொன்மகள் வந்தால் திரைப்படம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பதவிட்டு வருகின்றனர்.

  ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பொன்மகள் வந்தாள். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஜே.ஜே.ஃபெட்ரிக் இயக்கியுள்ளார்.

  இதில் முக்கிய கதாபாத்திரங்களில் பார்த்திபன், கே.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

  கல்யாண பெண் கெட்டப்பில் கழுத்து நிறைய நகையுடன் மீண்டும் வந்த மீரா மிதுன்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!

  எகிறிய எதிர்பார்ப்பு

  எகிறிய எதிர்பார்ப்பு

  ஏற்கனவே படத்தின் பிரிவியூ பார்த்து இயக்குநர் பாரதிராஜா, சமுத்திரக்கனி, அட்லி உள்ளிட்டோர் பாராட்டியதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில் அறிவித்தப்படி இந்தப் படம் நேரடியாக நேற்றிரவு அமேஸான் பிரைமில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் படம் குறித்த தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சில..

  தரமான படம்

  தரமான படம்

  அமேஸானில் பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்த இந்த நெட்டிசன், தரமான படம் கண்டிப்பா பாக்கலாம்.. எமோஷனல், த்ரில்லிங், ட்விஸ்ட்.. எல்லாமே இருக்கு.. ஜோதிகா நடிப்பு சூப்பர் என தம்ப்ஸ் அப் சிம்பளை போட்டு பாராட்டியிருக்கிறார்.

  பார்க்க வேண்டிய படம்

  பார்க்க வேண்டிய படம்

  மற்றொரு நெட்டிசனான இவர், பொன்மகள் வந்தாள் படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.. ஜேஜே ஃபெட்ரிக் சூப்பர் புரோ.. பாண்டியராஜ் போன்ற சில நடிகர்களைதான் வீணடித்துவிட்டீர்கள். பின்னணி இசைக்கூட சூப்பர்.. நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.. என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

  ரசித்தோம் அழுதோம்

  ரசித்தோம் அழுதோம்

  பொன்மகள் வந்தாள் ஜேஜே ஃபெட்ரிக்கால் வழங்கப்பட்ட பாடம்.. பெண்களை மதியுங்கள்.. ஜோதிகா மிஸ் வெண்பாவாகவே வாழ்ந்திருக்கிறார். நாங்கள் படத்தை பார்த்து ரசித்தோம்.. அழுதோம்.. முதல்பாதி த்ரில்லிங்.. இரண்டாம் பாதி டிவிஸ்ட்டுடன் கூடிய எமோஷனல்.. என பாராட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

  அடித்துக் கொன்ற சமூகம்

  அடித்துக் கொன்ற சமூகம்

  பசிக்கிதுனு ஒரு வேளை உணவை திருடி தின்றவனை அடித்து கொன்ற சமூகம்தான் 100 பேரை கற்பழித்து வீடியோ எடுத்து பரப்பியவனை வீதியில் சுதந்திரமாக அலைய விடுகிறது.. பொன்மகள் வந்தால் என பதிவிட்டுள்ளார் இவர்.

  மாற்றிக்கொள்ள வாய்ப்பு

  மாற்றிக்கொள்ள வாய்ப்பு

  டிவி, வெப் சீரியல் களில் நடித்தால் அவமானம் , மரியாதை குறைவு என்று நினைக்கும் நடிகர்கள் இப்போ ஜோதிகா நடிக்கும் OTT படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு பொறுத்து தங்கள் நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வாய்ப்பு இருக்கு என்று கூறியிருக்கிறார் இவர்.

  ஜோ நடிப்பு வேறலெவல்

  ஜோ நடிப்பு வேறலெவல்

  பொன்மகள் படத்தை பார்த்த இந்த நெட்டிசன், சிறந்த ஸ்க்ரீன் ப்ளே. ஜோதிகா நடிப்பு அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது.. இயக்குனர் ஃபெட்ரிக் ஹேட்ஸ்ஆஃப் என பதிவிட்டுள்ளார்.

  சுமாரான படம்..

  சுமாரான படம்..

  அதே நேரத்தில் படம் சுமராகத்தான் உள்ளது, படம் முழுக்க ஜோதிகா மட்டுமே வந்து செல்கிறார். இடைவேளைக்கு பிறகு படத்தில் ஒன்றும் இல்லை என்றும் சில நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். பொன்மகள் வந்தாள் சுமாரான படம், நல்லா தான் ஆரம்பிச்சது.. இன்டர்வல் வரை ஓகே.. அதுக்கு அப்புறம் அப்டியே சய்'னு முடிஞ்சு போச்சு.. பார்த்திபன் வர்ற சீன்ஸ் சூப்பர் என கூறியிருக்கிறார் இவர்.

  Pon Magal Vandhal Jothika as Lady Ajith | Kaa Andrea Jeremiah • Aiswarya Dutta, Myna Nandhini
  உங்களையே பார்க்க..

  உங்களையே பார்க்க..

  மற்றொரு நெட்டிசனான இவர் படம் முழுக்க ஜோதிகா மட்டுமே வருவதாக கூறி வேதனைப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,ஏன்மா ஜோதிகா நீங்க என்ன அறம் நயன்தாராவா, உள்ள உட்காந்து மூனு மணிநேரம் படம் பார்க்க.. என கேட்டுள்ளார்.

  English summary
  Ponmagal Vandhal movie released on Amazon prime. Netizens shares their reviews on social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X