ஃபர்ஸ்ட் ஹாஃப் வெறித்தனம்.. பக்கா தியேட்டர் மெட்டீரியல்.. சார்பட்டா பரம்பரை டிவிட்டர் விமர்சனம்!
சென்னை: சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமேஸான் பிரைமில் வெளியாகியுள்ள நிலையில் படம் குறித்து கருத்துக்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் சார்பட்டா பரம்பரை. பாக்ஸிங்கை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடித்துள்ளார்.
பசுபதி, கலையரசன், ஜான் கொக்கேன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த வாரம் இப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது.

அப்லாஸை அள்ளிய ட்ரெயிலர்
நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த ட்ரெயிலரை வெளியிட்டார். பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த ஆக்ஷன் காட்சிகளுடன் காவியமாக இருந்தது இதன் ட்ரெயிலர். இதனை பார்த்த ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் பா ரஞ்சித் மற்றும் நடிகர் ஆர்யாவின் அர்ப்பணிப்பை பாராட்டி தள்ளினர்.

பாக்ஸர் லுக்கிற்காக..
ஆர்யாவும் ரஞ்சித்தும் சார்பட்டா பரம்பரை படத்திற்காக கடினமாக உழைத்திருந்தது ட்ரெயிலரிலேயே தெரிந்தது. ஆர்யா பாக்ஸர் லுக்கிற்காக உடலை கடுமையாக வருத்திக் கொண்டதும் ட்ரெயிலரில் தெரியவந்தது.
ரசிகர்கள் விமர்சனம்
இதனால் படத்தின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் எகிறியது. இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படம் அமேஸான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

முதல்பாதி வெறித்தனம் மேக்ஸ்
அதன்படி படத்தின் முதல் பாதி வரை பார்த்த இந்த நெட்டிசன், முதல்பாதி வெறித்தனம் மேக்ஸ் என்றும் ஆர்யா மாஸ் என்றும் பதிவிட்டுள்ளார்.

உலகமே வியக்கும்
சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்த இந்த யூட்யூப் பிரபலமான பிரசாந்த் ரங்கசாமி, ஆர்யாவுக்குள் இருந்த மிருகம் விழித்துக்கொண்டது. உலகளவில் பார்வையாளர்களை திகைக்க வைக்கும் என பிரமிப்புடன் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு பெருமை
பிரசாந்த் ரங்கசாமி பதிவிட்டுள்ள மற்றொரு ட்வீ ட்டில் பாதி படம் முடிந்துள்ளது. என் கண்களில் கண்ணீர் வழிகிறது.. இந்த கய்ஸ் தமிழ் சினிமாவை பெருமைப்பட செய்துள்ளார்கள் என பதிவிட்டுள்ளார்.

ஆர்யா பிரிலியன்ட் பர்ஃபாமன்ஸ்
மற்றொரு நெட்டிசனான இவர் சார்பட்டா பரம்பரை படம் பாதி முடிந்துள்ளது. இது அசாதாரணமானது. ரஞ்சித் ராக்டு... ஆர்யா பிரிலியன்ட் பர்ஃபாமன்ஸ்.. லவ்விங் இட் என பதிவிட்டுள்ளார்.
Recommended Video

பக்கா தியேட்டர் மெட்டீரியல்
சார்பட்டா பரம்பரை திரைப்படம் இந்திய சினிமாவில் வெளிவந்த பெஸ்ட் பாக்ஸிங் திரைப்படம் என்றும் பலர் ரிவ்வியூ கொடுத்துள்ளனர். மேலும் இந்தப் படம் பக்கா தியேட்டர் மெட்டீரியல் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

மியூஸிக் வேற லெவல்
படத்தில் கபிலனுக்கம் ரோஸுக்கும் இடையே நடக்கும் பாக்ஸிங் காட்சி மரண மாஸ் என்றும், படத்தின் ஒவ்வொரு காட்சியும் மெய் சிலிர்க்க வைக்கிறது என்றும் பதிவிட்டுள்ளனர். அதோடு சந்தோஷ் நாராயணின் இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளதாகவும், இசை வேற லெவலில் இருப்பதாகவும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











