மூளை மாற்று சிகிச்சை கதையுடன் வெளியாகும் பிச்சைக்காரன் 2.. ஸ்னீக் பீக் ட்ரெய்லர்.. எப்படி இருக்கு?
சென்னை: விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து தயாரித்துள்ள பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் 3.45 நொடி ஸ்னீக் பீக் ட்ரெய்லராக வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
ஹீரோ விஜய் ஆண்டனியை காட்டாமல் படத்தின் மையக் கருவான மூளை மாற்று சிகிச்சையை பற்றியும் வில்லன் காட்சிகளையும் காட்டி மிரட்டி உள்ளனர்.
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடிக்க முன் வந்துள்ளார்.

பிளாக்பஸ்டர் பிச்சைக்காரன்
இசையமைப்பாளராக அசத்தி வந்த விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். தொடர்ந்து சலீம், சைத்தான், இந்தியா பாகிஸ்தான், காளி, எமன், திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன் என பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படங்களிலேயே அவருக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த படம் என்றால் அது இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் படம் தான்.

பார்ட் 2 வருது
ஹாலிவுட் படங்களை போல தமிழ் சினிமாவிலும் பார்ட் 2 சீசன் தொற்றிக் கொண்டது. ஏகப்பட்ட படங்களின் பார்ட் 2க்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஹிட்டான படத்தின் டைட்டிலை வைத்து புதிய படத்தை உருவாக்கினால் கன்ஃபார்ம் ஹிட் என்றும் ரசிகர்கள் அதிகம் அந்த படத்தை காண வருவார்கள் என்கிற நோக்கத்தில் இரண்டாம் பாகம் படங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து இயக்கி நடித்துள்ளார்.

விபத்தில் பிழைத்த விஜய் ஆண்டனி
பிச்சைக்காரன் 2 படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஸ்கை ஜெட் மோதி ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. சிகிச்சைக்கு பின் நலமாகிவிட்டேன் என அறிவித்த விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தின் அதிரடி அறிவிப்பையும் தற்போது வெளியிட்டுள்ளார்.

ஸ்னீக் பீக் ட்ரெய்லர்
பிச்சைக்காரன் 2 படத்தின் ட்ரெய்லரை வெளியிடாமல் முதல் 3.45 நொடிகள் கொண்ட காட்சியை தற்போது வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்பபை தூண்ட முயற்சித்துள்ளார் விஜய் ஆண்டனி. ஹீரோவை காட்டாமல் ஆரம்பத்திலேயே வில்லனை காட்டிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மூளை மாற்று சிகிச்சை
எலியை பிடித்து பாம்புக்கு உணவாக வில்லன் போட, ஒருவர் அதை பார்த்தே பயந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொள்ளும் ஆரம்ப காட்சியும் அதை தொடர்ந்து டிவியில் காட்டப்படும் மருத்துவர் சொல்லும் மூளை மாற்று அறுவை சிகிச்சை பற்றிய விஷயங்களும் இந்த ஸ்னீக் பீக்கில் இடம் பெற்றுள்ளன. நல்லவர்களின் மூளை மாற்றப்பட்டால் பரவாயில்லை. அதே போல ஹிட்லர் போல கெட்டவர்களின் மூளை மாற்றப்பட்டால் உலகம் என்னாகும் என தொகுப்பாளர் கேட்க, ஏற்கனவே அப்படி மூளையை மாற்றி இந்த உருவத்தில் தான் வில்லன் இருக்கிறானா? என்கிற சந்தேகத்தையும் படத்தை பார்க்கும் ஆர்வத்தையும் தூண்டுகிறது.
சம்மர் ரிலீஸ்
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள கொலை, ரத்தம், காக்கி, தமிழரசன், அக்னி சிறகுகள், வள்ளிமயில் என அரை டஜன் படங்கள் இன்னமும் வெளியாகாமல் உள்ளன. இந்நிலையில், வரும் சம்மருக்கு கன்ஃபார்மா தனது தயாரிப்பில் உருவாகி உள்ள பிச்சைக்காரன் 2 படத்தை ரிலீஸ் செய்து விடுவேன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் விஜய் ஆண்டனி.


Click it and Unblock the Notifications











